அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 227* ||

அத்தியாயம் 33 [ *அல் அஹ்ஸாப்* (எதிரணிகள்) வசனங்கள் (21~30]
_______________________________
1 ) *நபியின் மனைவியருக்கு, அல்லாஹ் வழங்கிய இரண்டு தேர்வுகள்* யாவை?

1. *இவ்வுலக வாழ்வையும், அதன் பகட்டையும் தேர்ந்தெடுத்தால், வாழ்க்கை வசதிகளை அளித்து, அழகிய முறையில் மணவிலக்குச் செய்துவிடுவதாகக் கூறுவது*.

2. *அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வீட்டையும் தேர்ந்தெடுத்தால், மகத்தான கூலி உண்டு* என்று கூறுவது. (33:28-29)
________________________________
2 ) *முஸ்லிம்களுக்கு அகழ்ப்போரின் வெற்றியாக அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகள்* யாவை?

*எதிரிகளின் பூமியையும், அவர்களின் இல்லங்களையும், அவர்களின் செல்வங்களையும், (முஸ்லிம்கள்) கால் பதிக்காத பூமியையும் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வழங்கினான்*. (33:27)
________________________________
3 ) இறைநம்பிக்கையாளர்களில், *அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உண்மைப்படுத்தியவர்கள்* குறித்து அல்லாஹ் என்ன கூறுகிறான்?

அவர்களில் *தமது இலட்சியத்தை (உயிர்த்தியாகம் செய்து) நிறைவேற்றியோரும் உள்ளனர்; (அதற்காகக்) காத்திருப்பவர்களும் உள்ளனர். அவர்கள் சிறிதும் (தமது நிலையை) மாற்றிக் கொள்ளவில்லை*. (33:23)
________________________________
4 ) உஹுதுப் போரின் போது *நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன்* என்று கூறிய நபிதோழர் யார்? இவ்வாறு எந்த நபிதோழரிடம் கூறினார்கள்?

*அனஸ் பின் நள்ர்* (ரலி) அவர்கள்.

*சஅத் பின் முஆத்* (ரலி) அவர்களிடம் கூறினார்கள் புகாரி (2805), முஸ்லிம் (3861)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *