அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 225* ||
அத்தியாயம் 33 [ *அல் அஹ்ஸாப்* (எதிரணிகள்) வசனங்கள் (01~10]
________________________________
1 ) *அகழ்ப்போரின் போது, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்குச் செய்த அருட்கொடையாக* மேற்கொண்ட வசனங்களில் குறிப்பிடப்படுபவை யாவை?
பதில்: எதிரிப் படைகளுக்கு எதிராக *ஒரு (பலத்த) காற்றையும், முஸ்லிம்களின் கண்களால் பார்க்க முடியாத (வானவர்) படைகளையும்* அனுப்பினான். (33:9)
________________________________
2 ) *இறைநம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் உயிர்களை விடவும் மேலானவர் யார்?*
பதில்: இறைநம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் *உயிர்களை விடவும் நபி (ஸல்) அவர்களே மிக்க மேலானவர்* ஆவார்கள். (33:6 & புகாரி 4781)
________________________________
3 ) அல்லாஹ், தனது *நபிக்கு வழங்கும் முதல் இரண்டு கட்டளைகள்* யாவை?
பதில்:
1. *அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வீராக*!
2. *இறைமறுப்பாளர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் கட்டுப்படாதீர்*! (33:1)
________________________________
4 ) *வளர்ப்புப் பிள்ளைகளை எவ்வாறு அழைக்க வேண்டும்*? அவர்களின் தந்தை யார் எனத் தெரியாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
பதில்: அவர்களை, அவர்களின் *உண்மையான தந்தையருடன் சேர்த்தே அழைக்க வேண்டும்*. தந்தை யார் எனத் தெரியாவிட்டால், அவர்கள் *மார்க்கச் சகோதரர்களும், நண்பர்களும்* ஆவர். (33:5)
________________________________
5 ) *அகழ்ப்போரின் போது, எதிரிப் படைகள் சூழ்ந்திருந்த நிலையில் முஸ்லிம்களின் மனநிலை* எவ்வாறு இருந்தது?
பதில்: அவர்களின் +கண்கள் (பயத்தால்) சாய்ந்து, இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைந்து, அல்லாஹ்வைப் பற்றி பல்வேறு (சந்தேக) எண்ணங்களை* எண்ணினார்கள். (33:10 & புகாரி 4103)
________________________________
6 ) *ஸைத் பின் ஹாரிஸா* (ரலி) அவர்களை, *வஹீ வருவதற்கு முன்னரும் பின்னரும் நபித்தோழர்கள்* எவ்வாறு அழைத்து வந்தனர்?
வஹீ வருவதற்கு முன்பு, *ஸைத் பின் முஹம்மத்* (முஹம்மதின் மகன் ஸைத்) என்று அழைத்தனர். வஹீ வந்த பின், அவர்களின் உண்மையான தந்தை பெயருடன் *ஸைத் பின் ஹாரிஸா*’ என்று அழைத்தனர்.(புகாரி 4782)
________________________________
7 ) *அகழ்ப்போரில் எதிரிக்கூட்டத்திற்கு* எதிராக நபி (ஸல்) அவர்கள் *என்ன பிரார்த்தனை* செய்தார்கள்?
*இறைவா! திருக்குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! இறைவா! இந்தக் கூட்டத்தார்களைத் தோற்கடிப்பாயாக! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!* என்று பிரார்த்தித்தார்கள். (புகாரி 2933)
________________________________
8 ) *ஒரு முஸ்லிம், தனது நம்பிக்கையை யார் மீது வைக்க வேண்டும்*? ஏன்?
அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். ஏனெனில், பொறுப்பேற்க அல்லாஹ் மட்டுமே போதுமானவன்.(33:3)
________________________________
9 ) அகழ்ப்போரில் எதிரிகளின் கூட்டணி தோற்கடிக்கப்பட்ட பிறகு, நபி (ஸல்) அவர்கள் *அல்லாஹ்வின் உதவியை எவ்வாறு போற்றிக் புகழ்ந்தார்கள்*?
*அல்லாஹ் தன் படையினரை அவனே கண்ணியப்படுத்தினான். தன் அடிமைக்கு அவனே உதவி புரிந்தான். (எதிரிகளின்) அணியினரை அவனே தனித்து வென்றான்* என்று போற்றிக் புகழ்ந்தார்கள். (புகாரி 4114)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*