*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 223* ||

அத்தியாயம் 32 [ *அஸ்ஸஜ்தா* (சிரம் பணிதல்) – வசனங்கள் (01~20]
_______________________________
1 ) *பூமிக்குள் மறைந்த பின் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதை மறுப்பவர்கள்*, உண்மையில் எதை மறுக்கிறார்கள்?

அவர்கள், *தமது இறைவனின் சந்திப்பை மறுக்கிறார்கள்*. (32:10)
________________________________
2 ) *மனிதனைச் சீரமைத்து, அல்லாஹ் அவனுக்கு வழங்கிய மூன்று முக்கிய அருட்கொடைகள்* யாவை?

*செவி, பார்வைகள், மற்றும் உள்ளங்கள்*. (32:9)
________________________________
3 ) *أَلْفَ سَنَةٍ* (அல்ஃப சனதின்) என்பது எதை பற்றி பேசுகிறது ?

*أَلْفَ سَنَةٍ* என்பதன் நேரடிப் பொருள் *ஆயிரம் வருடங்கள்* என்பதாகும்.

(32:5) இந்த வசனம், மனிதர்களின் காலக் கணக்கிற்கும், *அல்லாஹ்வின் காலக் கணக்கிற்கும் உள்ள மாபெரும் வித்தியாசத்தையும்*, அவனது ஆற்றலின் மகத்துவத்தையும் பற்றிப் பேசுகிறது.

அல்லாஹ், வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள காரியங்களை நிர்வகிக்கிறான்.

அந்த காரியங்கள் (வானவர்கள் மூலம்) அவனிடம் திரும்பிச் செல்வதற்கு ஆகும் *ஒரு நாள்* என்பது, நாம் பூமியில் கணக்கிடும் *ஆயிரம் வருடங்களுக்கு* சமமானது.

மேலும் மனிதர்களுக்கு *ஆயிரம் வருடங்கள் என்பது மிக நீண்ட காலம்*. ஆனால், *அல்லாஹ்வின் அதிகாரத்தின் முன், அது ஒரு நாள் என்பதே*.
________________________________
4 ) *நன்மையின் வாயில்கள்* என நபிகளார் குறிப்பிட்ட மூன்று காரியங்கள் யாவை?

1. *நோன்பு* (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்.

2. தண்ணீர் நெருப்பை அணைப்பது போல், *தர்மம்* தவறுகளை அழிக்கும்.

3. நள்ளிரவில் *(தஹஜ்ஜுத் தொழுகை)* ஒருவர் தொழுவது. (திர்மிதீ 2541)
________________________________
5 ) அனைத்துச் செயல்களுக்கும் தலையானது, அதன் தூண் மற்றும் அதன் உயர்வானது என நபிகளார் எவற்றைக் குறிப்பிட்டார்கள்?

* தலையானது: *இஸ்லாம்*.

* தூண் போன்றது: *தொழுகை*.

* உயர்வானது: *ஜிஹாத் (அறப்போர்*)-திர்மிதீ 2541
________________________________
6 ) *சொர்க்கத்தில் சேர்த்து, நரகிலிருந்து அப்புறப்படுத்தும் செயல்களாக* நபிகளார் பட்டியலிட்டவை யாவை?

அல்லாஹ்வை வணங்குவது, அவனுக்கு இணை வைக்காமல் இருப்பது, தொழுகையை நிலைநாட்டுவது, ஸகாத் கொடுப்பது, ரமளானில் நோன்பு நோற்பது, மற்றும் ஹஜ் செய்வது. (திர்மிதீ 2541)
________________________________
7 ) *மனிதர்களை முகங்குப்புற நரகத்தில் தள்ளும் முக்கியக் காரணி* எது?

அவர்களின் *நாவுகள்* அறுவடை செய்தவை (அதாவது, *அவர்கள் பேசிய தேவையற்ற மற்றும் பாவமான பேச்சுகள்*) தான் அவர்களை நரகத்தில் தள்ளும். (திர்மிதீ 2541)
________________________________
8 ) *அல்லாஹ்வின் வசனங்களை உண்மையாக நம்புபவர்களின் மூன்று பண்புகள்* யாவை?

1. (வசனங்கள் கூறப்பட்டால்) *ஸஜ்தாவில் விழுவார்கள்*.

2. *தமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவார்கள்*.

3. *பெருமையடிக்காமல் இருப்பார்கள்*. (ஆதாரம்: திருக்குர்ஆன் 32:15)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *