*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 222* ||

அத்தியாயம் 31 [ *லுக்மான்* (ஒரு நல்லடியார்) – வசனங்கள் (21~34]
________________________________
1 ) *அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்* என்பதற்கு இவ்வசனங்களில் கூறப்படும் காரணம் என்ன?

அல்லாஹ்வே உண்மையானவன்; *அவனையன்றி மற்றவர்கள் அழைப்பவை அனைத்தும் பொய்யானவை* என்பதே காரணம். (31:30)
________________________________
2 ) *உறுதியான, பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டவர்* யார்?

*நன்மை செய்த நிலையில், தமது முகத்தை (தன்னை முழுமையாக) அல்லாஹ்வை நோக்கித் திருப்புபவரே* பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். (31:22)
________________________________
3 ) *அல்லாஹ்வின் ஞானத்தையும் ஆற்றலையும் விவரிக்க* கூறப்படும் உதாரணம் என்ன?

*பூமியில் உள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாகவும், கடலுடன் மேலும் ஏழு கடல்கள் மையாகவும் சேர்ந்தாலும், அல்லாஹ்வின் வார்த்தைகளை (கட்டளைகளை) எழுதி முடிக்க முடியாது*. ( 31:27)
________________________________
4 ) அல்லாஹ் ஒருவன் மட்டுமே அறிந்திருக்கும் *மறைவானவற்றின் திறவுகோல்கள்* ஐந்து யாவை?

1. *யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு.*

2. (*எப்போது, எங்கே) மழை பொழியும் என்ற அறிவு*.

3. *கருவறைகளில் உள்ளவை பற்றிய அறிவு*.

4. *ஒருவர் நாளை என்ன சம்பாதிப்பார்* என்ற அறிவு.

5. *ஒருவர் எந்த இடத்தில் மரணிப்பார்* என்ற அறிவு. (31:34 மற்றும் புகாரி 4777)
________________________________
5 ) *மறுமை நாள் குறித்து மனிதர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் முக்கிய எச்சரிக்கை* என்ன?

*தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்!* என்பதே அந்த எச்சரிக்கையாகும். (31:33)

*அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எனவே இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்*. ஏமாற்றக் கூடியவனும் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். (31:33)
________________________________
6 ) *ஈமான், இஸ்லாம் & இஹ்ஸான்* என்பதை விளக்குக?

*ஈமான்:* அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனது சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்.

*இஸ்லாம்*: அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடைமையான ஸக்காத்தை வழங்கி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்.

*இஹ்ஸான்*: *அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும்*. நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்
(புகாரி (4777), முஸ்லிம் (7))
_______________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *