*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 221* ||
அத்தியாயம் 31 [ *லுக்மான்* (ஒரு நல்லடியார்) – வசனங்கள் (01~20]
________________________________
1 ) *நன்மை செய்யும் வெற்றியாளர்களின் மூன்று முக்கியப் பண்புகளாக* இவ்வசனங்களில் குறிப்பிடப்படுபவை யாவை?
1. அவர்கள் *தொழுகையை நிலைநாட்டுவார்கள்*.
2. *ஜகாத்தைக் கொடுப்பார்கள்*.
3. *மறுமையை உறுதியாக நம்புவார்கள்*. (31:4)
________________________________
2 ) *வானங்களைப் படைத்தது குறித்து அல்லாஹ்* கூறும் அற்புதம் என்ன?
நாம் பார்க்கின்ற *தூண்கள் எதுவுமின்றி* அல்லாஹ் வானங்களைப் படைத்தான். (31:10)
________________________________
3 ) உண்மையான *வெற்றியாளர்கள்(ٱلۡمُفۡلِحُونَ)யார்* என அல்லாஹ் குறிப்பிடுகிறான்?
தமது இறைவனிடமிருந்து (பெற்ற) *நேர்வழியில் இருப்பவர்களே* உண்மையான வெற்றியாளர்கள். (31:5)
________________________________
4 ) *நன்மை செய்வோருக்கு (முஹ்ஸின்களுக்கு) குர்ஆன்* எவ்வாறு வழிகாட்டுகிறது?
குர்ஆன் அவர்களுக்கு *நேர்வழியாகவும், அருளாகவும்* இருக்கிறது. ( 31:3)
_______________________________
5 ) ….*ஒரு பொருள் கடுகின் விதையளவே இருந்து*… (31:16) இந்த வசனம் மூலம் பெறப்படும் பாடம் என்ன?
அல்லாஹ் மிகவும் நுட்பமானவன், அனைத்தையும் நன்கறிந்தவன். அவனிடமிருந்து எதையும் மறைக்க முடியாது.
நன்மையோ தீமையோ அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது கரும் பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ மறைந்து இருந்தபோதிலும் சரி
மறுமை நாளில்
அவன் அனைத்தையும் விசாரணைக்குக் கொண்டு வருவான் என்பதே இதன் முக்கிய பாடமாகும்.
________________________________
6 ) *சேவல்கள் எதனால் கூவுகின்றன*?
*சேவல்கள் வானவரைப் பார்ப்பதால் கூவுகின்றன*. அதனால்தான், சேவல் கூவும் சத்தத்தைக் கேட்கும்போது, *அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேட்குமாறு* நபிகளார் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
*கழுதைகள் எதனால் கத்துகின்றன*?
*கழுதைகள் ஷைத்தானைப் பார்ப்பதால் கத்துகின்றன*. அதனால்தான், கழுதை கத்தும் சத்தத்தைக் கேட்கும்போது, ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள்.
(புகாரி 3303, முஸ்லிம் 5275)
________________________________
7 ) *மனிதர்களிடம் பழகும்போது, தவிர்க்க வேண்டிய இரண்டு குணங்களாக லுக்மான்* (அலை) கூறுபவை யாவை?
1. (*பெருமையுடன்) மனிதர்களை விட்டும் முகத்தைத் திருப்பிக் கொள்ளுதல்*.
2. *பூமியில் கர்வமாக நடத்தல்*. (31:18)
________________________________
8 ) *உறுதிமிக்க காரியங்கள்* என்று லுக்மான் (அலை) தன் மகனுக்குக் குறிப்பிடும் நான்கு விஷயங்கள் யாவை?
1. தொழுகையை நிலைநாட்டுவது.
2. நன்மையை ஏவுவது.
3. தீமையைத் தடுப்பது.
4. (சோதனைகள்) ஏற்படுவதைச் சகித்துக் கொள்வது. (31:17)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*
________________________________