அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 220* ||

அத்தியாயம் 30 [ *அர்ரூம் (ரோமாபுரி*)
– வசனங்கள் (41~60)]
__________________________________
1 ) *அல்லாஹ் காற்றுகளை அனுப்புவதன் நான்கு நோக்கங்களாக* இவ்வசனங்களில் குறிப்பிடப்படுபவை யாவை?

1. *அல்லாஹ் தனது அருளை மக்களுக்குச் சுவைக்கச்* செய்வதற்காக.

2. *கப்பல்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி செல்வதற்காக*.

3. *அல்லாஹ்வின் அருளை மக்கள் தேடுவதற்காக.*

4. மக்கள் *அல்லாஹ்விக்கு நன்றி செலுத்துவதற்காக*. (30:46)
________________________________
2 ) *இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்பதற்கு அல்லாஹ் காட்டும் அத்தாட்சி* என்ன?

*வறண்டு, செத்துப்போன பூமிக்கு மழையின் மூலம் மீண்டும் உயிரூட்டுவதை* அல்லாஹ் உதாரணமாகக் காட்டுகிறான். *அவனே இறந்தோரை உயிர்ப்பிப்பவன்* என்று கூறுகிறான். (30:50)
________________________________
3 ) *இறைநம்பிக்கையாளர்களுக்கு உதவுவது குறித்து* அல்லாஹ் என்ன கூறுகிறான்?

இறைநம்பிக்கையாளர்களுக்கு உதவுவது, *அல்லாஹ் தன் மீது கடமையாக ஆகிவிட்டது* என்று கூறுகிறான்.(30:47)
________________________________
4 ) *நல்லறம் செய்வோர் யாருக்காக அதைத் தயார் செய்து கொள்கின்றனர்*?

நல்லறம் செய்பவர்கள், *தங்களுக்குத் தாங்களே (தங்களின் மறுமை வாழ்வுக்காகவே*) தயாரித்துக் கொள்கின்றனர். (30:44)
_______________________________
5 ) *மனிதனின் மூன்று வாழ்க்கை நிலைகளாக* அல்லாஹ் குறிப்பிடுபவை யாவை?

1. பலவீனமான நிலையில் படைக்கப்படுதல் (*குழந்தைப் பருவம்*).

2. பலவீனத்திற்குப் பின் பலம் (*இளமை மற்றும் வாலிபம்*).

3. பலத்திற்குப் பின் பலவீனம் மற்றும் நரை (*முதுமை*). (30:54)
________________________________
6 ) நபி (ஸல்) அவர்களால் *யாருக்குச் செவியேற்கச் செய்ய முடியாது* என்று அல்லாஹ் கூறுகிறான்?

1. *இறந்தோரைச்* செவியேற்கச் செய்ய முடியாது.

2. (*சத்தியத்தைப்) புறக்கணித்து ஓடும் செவிடர்களுக்கும்* அழைப்பைச் செவியேற்கச் செய்ய முடியாது. (30:52)
________________________________
7 ) நபி (ஸல்) அவர்கள் *யாருக்கு மட்டுமே (சத்தியத்தை) கேட்கச் செய்ய முடியும்*?

*அல்லாஹ்வின் வசனங்களை நம்பி, (இஸ்லாத்திற்குக்) கட்டுப்பட்டு நடப்போருக்கு மட்டுமே* நபி (ஸல்) அவர்களால் கேட்கச் செய்ய முடியும். (30:53)
________________________________
8 ) அல்லாஹ்வின் அருளுக்குப் பிறகு, *மக்கள் எவ்வாறு நன்றி மறப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள்* என்பதற்கு அல்லாஹ் காட்டும் உதாரணம் என்ன?

அல்லாஹ், (*நல்ல விளைச்சலைத் தரும்) காற்றை அனுப்பி*, பின்னர் (*அதை அழிக்கும்) மற்றொரு காற்றை அனுப்பி*, அதன் காரணமாகப் பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை அவர்கள் கண்டால், அதன் பிறகு அவர்கள் (*முந்தைய அருள்களை மறந்து) நன்றி மறப்போராக* ஆகிவிடுகின்றனர். (30:51)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *