அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 219* ||
அத்தியாயம் 30 [ அர்ரூம் (ரோமாபுரி)
– வசனங்கள் (21~)]
_______________________________
1 ) *அநீதி இழைத்தோர் எதைப் பின்பற்றுவதால் வழிகேட்டில்* செல்கின்றனர்?
அவர்கள் அறிவின்றி, *தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுவதாலேயே* (சுய விருப்பம்) வழிகேட்டில் செல்கின்றனர். (30:29)
_______________________________
2 ) *எவையெல்லாம் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில்* உள்ளவை?
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது (30:21)
*வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், மனிதர்களின் மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும்* (30:22)
*இரவிலும் பகலிலும் மனிதர்கள் உறங்குவதும், (பகலில்) அவனது அருளைத் தேடுவதும்* (30:23)
*மின்னலை அச்சமூட்டியும், ஆதரவளிப்பதாகவும் காட்டுவதும், பூமி இறந்த பின்னர் வானிலிருந்து மழையைப் பொழிவித்து அதன்மூலம் பூமியை உயிர்ப்பிப்பதும்* (30:24)
*அல்லாஹ்வின் கட்டளையால் வானமும், பூமியும் நிலைபெற்றிருப்பது* (30:25)
_______________________________
3 ) “*فِطْرَتَ*” என்பது என்ன?
“*فِطْرَتَ*” என்பது *இஸ்லாம்* எனும் இயற்கை மார்க்கமாகும். அல்லாஹ் மனிதர்கள் அனைவரையும் இந்த *இயற்கை மார்க்கத்திலேயே படைத்துள்ளான்*. (30:30 மற்றும் & 1358)
_______________________________
4 ) *இணைவைப்பிற்கு, அல்லாஹ் மனிதர்களிலிருந்தே கூறும் உதாரணம் என்ன?*
உங்களுக்கு நாம் வழங்கிய *செல்வத்தில், உங்கள் அடிமைகள் உங்களுக்குப் பங்காளிகளாக இருக்கிறார்களா*? அவர்களை *உங்களுக்குச் சமமாகவோ* அல்லது அவர்களுக்கு நீங்கள் *அஞ்சவோ செய்வீர்களா?* என்று கேட்டு,
தங்களின் *அடிமைகளையே தங்களுக்குச் சமமாக ஆக்காத மனிதர்கள், எப்படி அல்லாஹ்வின் படைப்புகளை அவனுக்கு இணையாக்குகிறார்கள்* என்பதை உதாரணமாகக் கூறுகிறான். (30:28)
__________________________________
5 ) அல்லாஹ் தனது ஆற்றலை நிரூபிக்க, *இணைவைப்பவர்களின் தெய்வங்களால் செய்ய முடியாதவை எனக்கூறும்* நான்கு செயல்கள் யாவை?
1. *படைத்தல்*
2. *உணவளித்தல்*.
3. *மரணிக்கச் செய்தல்*.
4. (*மீண்டும்) உயிர்ப்பித்தல்*. (30:40)
_____________________________
6 ) *உண்மையான வெற்றியாளர்கள் யார்* என அல்லாஹ் குறிப்பிடுகிறான்?
*உறவினர், ஏழை, மற்றும் நாடோடி* ஆகியோருக்கு அவர்களின் *உரிமையை வழங்கி, அல்லாஹ்வின் முகத்தை நாடுவோரே* உண்மையான வெற்றியாளர்கள். (30:38)
_____________________________
7 ) *அல்லாஹ்வை நோக்கித் திரும்புபவர்களுக்கு, இவ்வசனங்களில் கூறப்படும்* மூன்று முக்கிய கட்டளைகள் யாவை?
1. *அல்லாஹ்வை அஞ்சுவது*.
2. *தொழுகையை நிலைநாட்டுவது*.
3. (மார்க்கத்தைப் பிரித்த) *இணை கற்பித்தோரில் ஆகிவிடாதிருப்பது*. (30:31-32)
_____________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*