அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 217* ||

அத்தியாயம் 29 – [ *அல்அன்கபூத் (சிலந்தி)* – வசனங்கள் (51~70)]
________________________________
_________________________________
1 ) *சொர்க்கத்தில் மாளிகைகளைப் பெறும் தகுதியுடையவர்களின் இரண்டு முக்கியப் பண்புகளாகக்* குறிப்பிடப்படுபவை யாவை?

1. அவர்கள் *பொறுமையைக் கடைப்பிடித்து*, அல்லாஹுவையே சார்ந்திருப்பார்கள்*. (29:59)

2. *இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வார்கள்* (29:58)
_________________________________
2 ) இறைமறுப்பாளர்கள் அற்புதங்களைக் கேட்டபோது, தங்களுக்கு அருளப்பட்ட எந்த விஷயம் போதுமானதாக இல்லையா என அல்லாஹ் கேட்கிறான்?

அவர்களுக்கு ஓதிக் காட்டப்படும் *இந்த குர்ஆன் (வேதம்) போதுமானதாக இல்லையா?* என்று அல்லாஹ் கேட்கிறான். (29:51)
_______________________________
3 )*இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு மறுமையில் கிடைக்கும் பரிசு* என்ன?

அவர்கள் *சொர்க்கத்தில், ஆறுகள் ஓடும் மாளிகைகளில் நிரந்தரமாகக் குடியமர்த்தப்படுவார்கள்*. (29:58)
_______________________________
4 ) *உண்மையான நட்டமடைந்தவர்கள் யார்* என அல்லாஹ் குறிப்பிடுகிறான்?

வீணானதை (பொய்யானவற்றை) நம்பி, *அல்லாஹ்வை மறுப்போரே உண்மையான நட்டமடைந்தவர்கள்*. (29:52)
__________________________________
5 ) மிகப்பெரிய அநீதி இழைத்தவன் யார் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்?

1. *அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவன்*.

2. *தன்னிடம் வந்த உண்மையை பொய்யெனக் கருதுபவன்*. இவர்களே மிகப்பெரிய அநீதி இழைத்தவர்கள் என அல்லாஹ் குறிப்பிடுகிறான். (29:68)
_________________________________
6 ) 29 அல்-அன்கபூத் (சிலந்தி), இந்த அத்தியாயத்தின் *முக்கிய அறிவுரைகள் யாவை* ?

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களைப் பாதுகாவலர்களாக நம்புவது, எவ்வாறு சிலந்தி வலை மிகவும் பலவீனமானதோ. *அல்லாஹ் அல்லாதவர்களின் உதவியும் அவ்வாரே மிகவும் பலவீனமானது* மற்றும் பயனற்றது என்பதை, இந்த எளிய உதாரணம் மூலம் அல்லாஹ் விளக்குகிறான்.

*நூஹ், இப்ராஹீம், லூத், ஷுஐப் (அலைஹிமுஸ்ஸலாம்) போன்ற நபிமார்களும், அவர்களின் சமூகங்களும் சந்தித்த சோதனைகளை* இந்த அத்தியாயம் விவரிக்கிறது.

*இறைநம்பிக்கையாளர்கள் சோதனைகளைப் பொறுமையுடன் எதிர்கொண்ட* விதத்தையும், நிராகரித்தவர்கள் தண்டிக்கப்பட்ட விதத்தையும் இதன் மூலம் அறியலாம்.

இணைவைப்பவர்கள் கூட, வானம் மற்றும் பூமியைப் படைத்தவர் யார் என்று கேட்டால், *அல்லாஹ்* என்றே ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், துன்பம் வரும்போது மட்டும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து, *துன்பம் நீங்கியவுடன் மீண்டும் இணைவைப்பில்* ஈடுபடுகின்றனர்.

இந்த முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி, தவ்ஹீத் (*ஓரிறைக் கொள்கையின்*) முக்கியத்துவத்தை இந்த அத்தியாயம் வலியுறுத்துகிறது.

*பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும்*; ஆனால், அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் காரியங்களில் அவர்களுக்கு துணை நிற்கக் கூடாது.

மேலும் சில அறிவுரைகள்:

• *தொழுகையின் நன்மைகள்*.

• *வேதம் வழங்கப்பட்டவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்*.

• *அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ரிஸ்க் (வாழ்வாதாரம்) வழங்குகிறான்*.

• *இந்த உலகம் வீணான விளையாட்டு; மறுமையே சிறந்தது* எனவும் அல்லாஹ் கூறுகிறான்.
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *