அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 215* ||
அத்தியாயம் 28 – [அல்கஸஸ் (வரலாறு) 81-88 வசனங்கள்]
அத்தியாயம் 29 – [ *அல்அன்கபூத் (சிலந்தி)* – வசனங்கள் (01~20)]
________________________________
1 ) *தாருல் ஆகீர் (மறுமை வீடு) யாருக்கு என அல்லாஹ் கூறுகிறான்*?
1. *இப்பூமியில் கர்வம் கொள்ளாதவர்கள்*.
2. *பூமியில் குழப்பத்தை விரும்பாதவர்கள்*. (28:83)
________________________________
2 ) *காரூனுக்கு ஏற்பட்ட சேதத்தைக் கண்டதும், (அவனுக்கு ஆசைப்பட்ட) மக்கள் தம் நிலையை எவ்வாறு மாற்றிக் கொண்டார்கள்?*
*அல்லாஹ் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை வாரி வழங்குகிறான், (நாடியோருக்கு) குறைத்தும் கொடுக்கிறான்*
*அல்லாஹ் தங்களுக்கு அருள் புரியாமல் இருந்திருந்தால், தங்களையும் பூமிக்குள் புதையுறச் செய்திருப்பான்.i
*நன்றிகெட்டவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்* (28:82)
(அந்த மக்கள் உலக ஆசையை விட்டு, அல்லாஹ்வின் அருளைய உணர்ந்து, நன்றி செலுத்தும் நிலைக்கு மாறினார்கள் *அல்ஹம்துலில்லாஹ்* ).
________________________________
9 ) *29:8 வது வசனம் யாருடைய விஷயத்தில் இறக்கி அருளப்பட்டது*?
*நபித்தோழர் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் விஷயத்தில் இறக்கி அருளப்பட்டது*.
(முஸ்லிம் 4789, திர்மிதீ 3113)
________________________________
4 ) *சோதனைகள் யாருக்கு ஏற்படும்* என அல்லாஹ் கூறுகிறான்?
*இறைநம்பிக்கை கொண்டோம்* என்று கூறுபவர்களுக்கு, அவர்கள் கூறுவதில் *உண்மையாளர்களா அல்லது பொய்யர்களா என்பதை அறிவதற்காகச் சோதனைகள் ஏற்படும்* என அல்லாஹ் கூறுகிறான். (29:2-3)
_________________________________
5 ) *வழிகெடுப்பவர்கள் மறுமையில் என்னென்ன சுமைகளைச் சுமப்பார்கள்*?
அவர்கள் *தமது சொந்தப் பாவச் சுமைகளையும், அத்துடன் அவர்கள் யாரையெல்லாம் வழிகெடுத்தார்களோ, அவர்களின் பாவச் சுமைகளையும்* சேர்த்துச் சுமப்பார்கள். (29:13)
மேலதிக தகவல்: *ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்* என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட வசனம் இந்த அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்று கருத முடியாது.
ஏனெனில் ஒருவன் பிறரை வழிகெடுத்தால் வழிகெடுக்கப்பட்டவனின் சுமையைச் சுமந்து தான் ஆக வேண்டும். இது *பிறர் பாவத்தைச் சுமப்பதல்ல. வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பது தான்.*
_________________________________
6 ) *நூஹ் நபி அவர்கள் தன் சமுதாய மக்களுடன்* எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள்?
நூஹ் நபி அவர்கள், ஆயிரம் ஆண்டுகளில் ஐம்பது ஆண்டுகள் குறைவாக (அதாவது, *950 ஆண்டுகள்*) தன் சமுதாய மக்களுடன் வாழ்ந்தார்கள். (29:14)
_________________________________
7 ) *இறைநம்பிக்கையாளர்களை வழிகெடுப்பதற்காக, இறைமறுப்பாளர்கள் கூறும் பொய்யான வாக்குறுதி* என்ன?
*எங்கள் வழியைப் பின்பற்றுங்கள்! நாங்கள் உங்கள் பாவங்களைச் சுமந்து கொள்கிறோம்* என்பதே அந்தப் பொய்யான வாக்குறுதியாகும். ஆனால், *அவர்கள் யாருடைய பாவத்தையும் சுமக்க மாட்டார்கள்* என அல்லாஹ் கூறுகிறான். (29:12)
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*