அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 213* ||
அத்தியாயம் 27 [*அந்நமல்( எறும்பு*)
91- 93] வசனங்கள்.
அத்தியாயம் 28 – அல்கஸஸ் (வரலாறு) 1-50 வசனம் வரை
________________________________
1 ) *ஹரம் எல்லைக்குள் எவையெல்லாம் தடுக்கப்பட்டது?*
*முட்கள் பிடுங்கப்படக் கூடாது.*
*வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது*.
*கீழே விழுந்து கிடக்கும் பொருளை அதை அறிவிப்புச் செய்பவர்* தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது.
*புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது*
(*இத்கிர்* புல்லைத் தவிர ஏனெனில், அது அவர்களுடைய வீடுகளுக்கும் அவர்களுடைய உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிறது)
(இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி (3189), முஸ்லிம் (2632)
________________________________
2 ) *முஸா நபியின் பிறப்பின் போது இருந்த சோதனைகளில் இருந்து அவர்களை பாதுகாத்து நபியாக ஆக்கியதற்க்கான சில காரணங்களை அல்லாஹ்* கூறுகிறான் அவை என்ன?
(A). அப்பூமியில் (ஃபிர்அவ்னால்) *பலவீனமாக்கப்பட்டோருக்கு (பனூ இஸ்ராயீல்) அருள்புரிய வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டம்*. (28:5)
(B). அந்தப் பலவீனமான மக்களை *தலைவர்களாக ஆக்கவும், அப்பூமிக்குச் சொந்தக்காரர்களாக* ஆக்கவும்அல்லாஹ் விரும்பினான். (28: 5)
(C). அவர்களுக்கு *பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்குவதற்காகவும்* அல்லாஹ் நாடினான். (28: 6)
(D). ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் அவர்களின் படையினர், பனூ இஸ்ராயீல் மூலம் தங்களுக்கு என்ன அழிவு வந்துவிடுமோ என்று *அஞ்சிக் கொண்டிருந்தார்களோ, அதை அவர்களுக்கு நேரில் காட்டுவதற்காகவும் அல்லாஹ் விரும்பினான்*. (28: 6)
________________________________
3 ) குற்றம் செய்த பின் மூஸா நபி கேட்ட பிரார்தனை என்ன?
*என் இறைவனே! எனக்கே நான் அநியாயம் செய்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!*
رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي
*ரப்பி இன்னீ ளலம்து நஃப்ஸீ ஃபஃக்பிர்லீ*
(28:16)
________________________________
4 ) *மூஸா நபியை வேலைக்கு அமர்த்த அவரிடம் என்ன தகுதி இருந்தது*?
*வலிமையானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்ததே*,
(28:26)
________________________________
5 ) *இறைவனை காண்பதற்க்கு ஃபிர்அவ்ன் என்ன முயற்சி செய்தான்?*
ஃபிர்அவ்ன், தனது அமைச்சர் ஹாமனிடம், *களிமண்ணின் மீது நெருப்பை மூட்டி (செங்கற்களைச் செய்து), தனக்காக ஓர் உயர்ந்த மாளிகையைக் (கோபுரத்தைக்) கட்டுமாறு* கட்டளையிட்டான். அதன் மூலம், மூஸாவின் இறைவனைத் தான் காணப்போவதாக (பரிகாசமாகக்) கூறினான். (28:38)
________________________________
6 ) *ஃபிர்அவ்னும் அவனின் கூட்டத்தாரும் மூழ்கடிக்கப்பட்ட பிறகுதான் மூஸா நபிக்கு வேதம் வழங்கப்பட்டதா?*
ஆம், (28:43) இல், *முந்தைய தலைமுறையினரை நாம் அழித்த பிறகு மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம்* என்று அல்லாஹ் கூறுவது இதை உறுதி செய்கிறது.
________________________________
7 ) *இரண்டு சூனியங்கள்* என காஃபிர்கள் எதைக் கூறினார்கள்?
காஃபிர்கள், *குர்ஆனையும் தவ்ராத்தையும்*, “ஒன்றுக்கொன்று உதவி செய்யக்கூடிய இரண்டு சூனியங்கள்” என்று கூறினார்கள். (28:48)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*