அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 212* ||
அத்தியாயம் 27 [*அந்நமல்( எறும்பு*)
41- 90 ] வசனங்கள்.
_________________________________
1 ) *அல்லாஹ்வின் கருணை(அருள்)கிடைக்க* ஸாலிஹ் நபி என்ன செய்ய சொன்னார்கள்?
அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு ( *இஸ்திஃபார்*) கோர சொன்னார்கள் (27:45)
_________________________________
2 ) சுலைமான் நபிக்கு வழங்கபட்ட மாபெரும் அரசாட்சியை கண்ட *ஸபா அரசி* கூறியது என்ன?
*என் இறைவனே! எனக்கே நான் அநியாயம் செய்து விட்டேன்*. ( ரப்பி இன்னீ லுலம்து நப்ஸி)
*சுலைமானுடன் சேர்ந்து நானும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு விட்டேன்* ( வஅஸ்லம்து மாஅ சுலைமான லில்லாஹி ரப்பில் ஆலமீன்)என கூறினாள் (27:44)
_________________________________
3 ) ஸாலிஹ் நபியையும் அவரது குடும்பத்தினரையும் *இரவில் தாக்கி விடுவோம்* என சதிதிட்டம் போட்டவர்கள் யார்?
அந்நகரில் ஸமுது சமுதாயத்தின் இருந்த *ஒன்பது பேர் கொண்ட குழுவினர்* (27:48)
_________________________________
4 ) *லூத் (அலை) அவர்களுடன் இருந்த நல்லடியார்களை* அச்சமுதாய மக்கள் *எவ்வாறு(பரிகாசமாக) அழைத்தார்கள்*?
*அப்பழுக்கற்ற மனிதர்கள்” (27:56)
_________________________________
5 ) *மூதாதையர்களுக்கும் சொல்லபட்டதாக கூறி நிராகரிப்பாளர்கள்* எதை மறுத்தார்கள்?
*நாமும் நம் முன்னோர்களும் (மண்ணோடு) மண்ணாக ஆகிவிட்டாலும் (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவோம்*. (27:68)
_________________________________
6 ) *யாரிடம் பிரார்த்திப்பீர்கள் என கேட்டவர்க்கு* நபி ஸல் கூறிய பதில் என்ன?
*ஏகனான அல்லாஹ்விடம் பிரார்த்திப்பேன்*.
உமக்கு ஏதாவது துன்பம் நேர்ந்தால் நீர் அவனை அழைத்தால் அவன் உம்மை விட்டும் அத்துன்பத்தை நீக்குவான்.
வறண்ட பாலைவன பூமியில் (உனது வாகனத்தை) நீ தொலைத்து விடும்போது, அவனை நீ அழைத்தால் அவன் உனக்குப் பதிலளிப்பான்” அறிவிப்பவர்: நபித்தோழரில் ஒருவர்,
நூல்: அஹ்மத் (16021)
_________________________________
7 ) *இறந்தவர்களிடம் பிரார்த்திக்கக் கூடாது, கப்ரு வழிபாடு தவறு* எனக் கூறும் முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக உள்ள வசனம் எது?
மரணித்தவர்கள், நபி (ஸல்) அவர்களின் அழைப்பையே செவியேற்க மாட்டார்கள் என்றால், சாதாரண மக்களின் பிரார்த்தனைகளை எப்படிச் செவியேற்பார்கள்? எனவே, இந்த வசனம் இறந்தவர்களிடம் உதவி தேடுவதும், பிரார்த்திப்பதும் தவறு என்பதற்கு மிக முக்கிய ஆதாரமாக உள்ளது.
(27:80)
_________________________________
8 ) *குர்ஆன் அதிகமான அளவு யாருடைய கருத்து முரண்பாட்டை* விவரித்துக் கூறுகிறது?
*இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் (பனூ இஸ்ராயீல்) கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில்* அதிகமானவற்றை அவர்களுக்கு எடுத்துரைக்கிறது.
(27:76)
_________________________________
9 ) ஸூர் ஊதப்படும் நாளில் மலைகளின் நிலை எவ்வாறு இருக்கும்?
இன்று உறுதியானவையாகக் காணப்படும் மலைகள், அன்று *மேகம் நகர்வதைப் போன்று நகர்ந்து செல்லும்*. (27:88)
_________________________________
10 ) நன்மையைக் கொண்டு வருவோரும், தீமையைக் கொண்டு வருவோரும் அந்நாளில் எவ்வாறு இருப்பார்கள்?
நன்மையைக் கொண்டு வருவோர்…
அவர்கள் செய்த நன்மையை விடச் சிறந்ததைப் (பரிசைப்) பெறுவார்கள். மேலும், *அந்நாளின் பெரும் திகிலிலிருந்து அச்சமற்றுப் பாதுகாப்பாக இருப்பார்கள்*.
தீமையைக் கொண்டு வருவோர்…
அவர்கள் *நரகத்தில் முகம் குப்புற வீசப்படுவார்கள்*. (27:89-90)
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*