அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 210* ||
அத்தியாயம் 26 [ *அஷ்ஷுஅரா* – கவிஞர்கள் வசனங்கள் (216~ 227)]
_________________________________
1 ) *எதிரிகளுக்கு கவிதையால் வசைபாடி பதில் கொடுத்த நபித்தோழர்* யார்?
இஸ்லாத்தின் எதிரிகள், நபி (ஸல்) அவர்களைக் கவிதைகள் மூலம் பழித்துப் பேசியபோது, அவர்களுக்குத் தனது கவிதை மூலமாகவே பதிலடி கொடுத்த நபித்தோழர் *ஹஸ்ஸான் இப்னு ஸாபித்* (ரலி) அவர்கள் ஆவார்கள். அவர்களை *நபி (ஸல்) அவர்களின் கவிஞர்* என்றே அழைப்பர். (26:227 புகாரி 3213)
_________________________________
2 ) 26 வது அத்தியாயத்தில் *அல்லாஹ் தனது இரண்டு பெயர்களை கொண்டு திரும்ப திரும்ப (ஒன்பது முறை) தன்னை புகழ்கிறான்*. அந்த பெயர்கள் என்ன?
1. *அல்-அஸீஸ் (الْعَزِيزُ): (யாவரையும்) மிகைத்தவன்*
2. *அர்-ரஹீம் (الرَّحِيمُ): நிகரிலா அன்புடையோன்*
(26:9, 68, 104, 122, 140, 159, 175, 191, 217)
_________________________________
3) 26 வது அத்தியாயத்தில் கூறப்படும் *நபிமார்கள் மற்றும் சமுதாயத்தினர்கள்* பெயர்களை மட்டும் குறிப்பிடவும்.
• *மூஸா (அலை) – ஃபிர்அவ்ன்* மற்றும் அவனது கூட்டத்தினர்
• *இப்ராஹீம் (அலை) – அவருடைய தந்தை* மற்றும் சமுதாயத்தினர்
• *நூஹ் (அலை) – நூஹ் நபியின்* சமுதாயத்தினர்
• *ஹூது (அலை) – ஆது சமுதாயத்தினர்*
• *ஸாலிஹ் (அலை) – ஸமூது சமுதாயத்தினர்*
• *லூத் (அலை) – லூத் நபியின் சமுதாயத்தினர்*
• *ஷுஐப் (அலை) – தோப்புவாசிகள்* (அஸ்ஹாப் அல்-அய்க்கத்)
_________________________________
4 ) *சோதிடனுக்கும் ஷைத்தானுக்கும் உள்ள தொடர்பு பற்றி* நபி (ஸல்) என்ன கூறினார்கள்?
ஷைத்தான்கள் பெரும் பொய்யர்களான பாவிகள் மீது இறங்கி, தாங்கள் (வானில்) ஒட்டுக் கேட்ட செய்திகளுடன் பல பொய்களைக் கலந்து அவர்களிடம் கூறப்டுகிறது.
இதை விளக்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மக்கள் சோதிடர்களைப் பற்றிக் கேட்டபோது, நபி (ஸல்) அவர்கள், *அவர்கள் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை* என்றார்கள். மக்கள், *அல்லாஹ்வின் தூதரே! சில சமயம் அவர்கள் சொல்லும் ஒரு விஷயம் உண்மையாக இருக்கிறதே?* எனக் கேட்டனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், *அந்த உண்மையான வார்த்தையை, ஒரு ஜின் (வானிலிருந்து) திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்டு வந்து, கோழி கொக்குக்… கொக்குக்… என்று கத்துவதைப் போல் தன் நண்பனான சோதிடனின் காதில் போட்டு விடுகிறது. அவனோ, அதனுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பொய்களைக் கலந்து (மக்களிடம்) சொல்கிறான்* எனக் கூறினார்கள். (புகாரி 5762)
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*