*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 21* ||

[அத்தியாயம் 4 *அந்நிஸா-பெண்கள்* (வசனங்கள் *21-30* வரை)]

1. *திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட உறவுகள்* யார் யார்?

2. *குளிர் தாங்க முடியாத சூழ்நிலையின் போது குளிப்பு கடமையான நிலையில் தயம்மம் செய்து தொழுது* கொள்ள மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? (*உண்டு என்றால் ஆதாரத்தை பதியவும்)*

_________________________

1. ||*மணக்கக் கூடாத உறவுகள்*||

*ஆண்கள் கீழ்க்காணும் உறவினர்களை மணக்க அனுமதியில்லை.*

தாய், மகள், சகோதரி, தாயின் சகோதரி, தந்தையின் சகோதரி, சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், பாலூட்டிய அன்னையர், பாலூட்டிய அன்னையின் புதல்விகள், மனைவியின் தாய், மனைவியின் புதல்வி, மகனின் மனைவி, இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்

||*பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்*||

தந்தை, மகன், சகோதரன், தாயின் சகோதரன், தந்தையின் சகோதரன், சகோதரனின் மகன், சகோதரியின் மகன், பாலூட்டிய அன்னையின் கணவன், பாலூட்டிய அன்னையின் மகன், கணவனின் தந்தை, கணவனின் புதல்வன், புதல்வியின் கணவன், சகோதரியின் கணவனை சகோதரியுடன் கணவன் வாழும் போது மணப்பது

*பிறருக்கு மனைவியராக இருக்கின்றவர்களும் (ஆண்களுக்கு திருமணம் செய்ய தடுக்கப்பட்டுள்ளனர்*) -4:24

*ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன. திருக்குர்ஆன் 4:23 வசனத்திலிருந்து இதை அறியலாம்.*

கூடுதல் தகவலாக…

(*அபூதல்ஹா அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதே மஹராக அங்கீகரித்தவர் சுவனத்து பெண்மணி உம்மு சுலைம் அவர்கள்*

—————————————

(இஸ்லாத்தை ஏற்காதவராக இருந்தபோது) *அபூதல்ஹா* (ரலி) அவர்கள், *உம்மு ஸுலைம் (ரலி) அவர்களை (மிகவும் விரும்பி) பெண் கேட்டார்கள்.*

அதற்கு உம்மு ஸுலைம் (ரளி) அவர்கள், அபூதல்ஹா அவர்களே! உங்களைப் போன்றவர்கள் (பெண் கேட்டால்) மறுக்கப்படாது. (அவ்வளவு சிறந்வர்கள் நீங்கள்) ஆனால் நீங்கள் *ஓரிறைக் கொள்கையை மறுப்பவராக* இருக்கிறீர்கள். *நானோ முஸ்லிமான* பெண்ணாக இருக்கிறேன்.

உங்களைத் திருமணம் செய்வது எனக்கு ஆகுமானதல்ல. *நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால் அதுவே எனது மஹராகும்.* இதைத் தவிர வேறெதையும் நான் கேட்க மாட்டேன் என்று கூறினார்கள். *அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.* அதுவே அவர்களுடைய மஹராக ஆனது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: நஸாயி 3289

இறைமறுப்பாளர்களை திருமணம் செய்ய முடியாது….

*இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள்.* இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.(2:221)

_________________________

2. *தண்ணீரைப் பயன்படுத்தினால், தமக்கு நோயோ மரணமோ ஏற்பட்டுவிடுமென குளியல் கடமையானவர் அஞ்சினால் அந்நேரத்தில் தண்ணீரைப் பயன்படுத்தாமல் தயம்மும் செய்து கொள்ளலாம்*

தாதுஸ்ஸலாஸில் எனும் இடத்தில் நடந்த போரில் குளிராக இருந்த *ஒரு இரவில் எனக்குத் தூக்கத்தில் விந்து வெளியானது. நான் குளித்தால் நாசமாகி விடுவேன்* என்று அஞ்சினேன்.

எனவே தயம்மும் செய்து என் சகாக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் (பின்னர்) தெரிவித்தேன். *’அம்ரே! உமக்குக் குளிப்பு கடமையாக இருந்த போது உமது சகாக்களுக்குத் தொழுவித்தீரா?’* என்று நபி (ஸல்) கேட்டனர்.

குளிப்பதற்குத் தடையாக இருந்த காரணத்தை அவர்களிடம் கூறினேன். *’உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் உள்ளவனாக இருக்கிறான்’* என்று அல்லாஹ் கூறுவதை நான் செவியுற்றுள்ளேன் (4:29) என்று விளக்கினேன். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். வேறு எதையும் கூறவில்லை.

அறிவிப்பவர்: *அம்ரு பின் அல்ஆஸ்* (ரலி)

நூல்கள்: *அபூதாவூத் 283,* அஹ்மத் *17144*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *