அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 209* ||
அத்தியாயம் 26 [ *அஷ்ஷுஅரா* – கவிஞர்கள் வசனங்கள் (161~215)]
__________________________________
1 ) *லூத் நபிக்கு நிராகரிப்பாளர்கள் கொடுத்த எச்சரிக்கை என்ன?*
*லூத்தே! நீர் விலகிக் கொள்ளாவிட்டால் வெளியேற்றப்படுவோரில் ஒருவராக ஆகிவிடுவீர்* என அவர்கள் கூறினர்.(26:167)
__________________________________
2 ) *எச்சரிக்கப்பட்டோர் மீது இறக்கபட்ட மழை எத்தகையது?*
*மிகக் கெட்டது* (26:173)
__________________________________
3 ) *எந்த நாளில் வேதனை இறக்கப்பட்டது*?
(*மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளில்* வேதனை இறக்கப்பட்டது. அந்த வசனம் அதை *மகத்தான நாளின் வேதனை* என்றும் குறிப்பிடுகிறது. (26:189)
__________________________________
4 )*அஸ்ஹாப் அய்க்கத்* என எந்த நபியின் சமுகத்தினர் அழைக்கபடுகின்றனர்?
ஷுஐப் (அலை) அவர்களின் சமுகத்தினர், *அஸ்ஹாப் அல்-அய்க்கத் (தோப்புவாசிகள்*) என்று அழைக்கப்படுகின்றனர். (36:276-177, 7:85,11:84)
__________________________________
5 ) *பனீ இஸ்ராயீலின் உலமாக்கள் எதை அறிந்து வைத்திருந்ததாக* அல்லாஹ் கூறுகிறான்?
(நபிளாருக்கு அருளப்பட்ட) இந்த *குர்ஆன், முன்னோர்களின் வேதங்களிலும் (தவ்ராத், இன்ஜீல்* போன்றவற்றிலும்) கூறப்பட்டுள்ளது என்பதை *இஸ்ராயீலின் மக்களில் உள்ள அறிஞர்கள் அறிந்து வைத்திருந்ததாக* அல்லாஹ் கூறுகிறான்.
(26:196-197)
__________________________________
6 ) *ரூஹுல் அமீன்* என்பது யாரை குறிக்கும்?
*ரூஹுல் அமீன்* (நம்பிக்கைக்குரிய ரூஹ்) என்பது *வானவர்களின் தலைவர் ஜிப்ரீல்* (அலை) அவர்களைக் குறிக்கும்.
அவரே குர்ஆனை நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இறக்கினார். (26:193)
__________________________________
7 ) *எந்த மலையின் மீது ஏறி* நின்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் *ஸஃபா* மலை மீது ஏறி நின்று, தமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள். (புகாரி 4770)
__________________________________
8 ) *ஷைத்தான்கள் குர்ஆனை இறக்கவில்லை* என்பதற்கு அல்லாஹ் கூறும் மூன்று காரணங்கள் என்ன?
* (குர்ஆனை இறக்கும்) அந்தப் பணி *அவர்களுக்குத் தகுதியானதல்ல*.
* அதற்கு (குர்ஆனை இறக்குவதற்கு) அவர்களால் *இயலாது (சக்தி பெற மாட்டார்கள்).*
* அவர்கள் (வானவர் ஜிப்ரீல் மூலம் அருளப்படும் வஹீயை) *செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவர்கள்.*
(26:210-212)
__________________________________
9 ) *யாரையெல்லாம் அழைத்து அல்லாஹ்வின் தூதர்* அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *தமது நெருங்கிய உறவினர்களை* அழைத்து எச்சரிக்கை செய்தார்கள்.
ஹதீஸ்களின்படி, ஸஃபா மலையில் ஏறி நின்று, குறைஷிக் குலத்தின் *பனூ ஃபிஹ்ர், பனூ அதீ* போன்ற ஒவ்வொரு கிளையினரின் பெயரையும் தனித்தனியாகக் கூறி அழைத்து எச்சரிக்கை செய்தார்கள்.
(26:214 மற்றும் ஸஹீஹ் புகாரி 4770)
__________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*