அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 207* ||

அத்தியாயம் 26 [ *அஷ்ஷுஅரா* – கவிஞர்கள் வசனங்கள் (61~81)]
__________________________________
1 ) *சிலைகளை வணங்குவதாகக் கூறிய தனது சமூகத்தாரிடம், அந்தச் சிலைகளின் இயலாமையை உணர்த்துவதற்காக இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட இரண்டு முக்கியக் கேள்விகள் யாவை*?

இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட இரண்டு கேள்விகள்:

(i) நீங்கள் (அவற்றை) *அழைக்கும்போது இவை செவியுறுகின்றனவா?*

(ii) அல்லது *உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா?*
(26:72-73)
_________________________________
2 ) கடலைப் பிளப்பதற்காக மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய கட்டளை என்ன? அதன் விளைவாக நிகழ்ந்த அற்புதம் யாது?

*உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக* என்று அல்லாஹ் அறிவித்தான். உடனே *கடல் பிளந்தது, அதன் ஒவ்வொரு பிளவும் ஒரு பெரிய மலை போன்று* ஆனது. (26:63)
_________________________________
3 ) ஃபிர்அவ்னின் படையையும், தங்களையும் *நேருக்கு நேர் கண்டபோது, மூஸா (அலை) அவர்களின் சமூகத்தார் என்ன கூறினார்கள்*? அதற்கு *மூஸா (அலை) அவர்கள் அளித்த உறுதியான பதில்* என்ன?

*நாம் (எதிரிகளிடம்) பிடிக்கப்பட்டு விடுவோம்* என்று அவர்கள் கூறினர். அதற்கு மூஸா (அலை) அவர்கள், *அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்* என்று உறுதியாகப் பதிலளித்தார். (26:61-62)
__________________________________
4 ) *அகிலத்தின் இறைவனை* பற்றி இப்ராஹீம் நபி கூறுபவை யாவை?

இப்ராஹீம் (அலை) அவர்கள் அகிலத்தின் இறைவனைப் பற்றிக் குறிப்பிடும் பண்புகள்..

• *அவனே என்னைப் படைத்தான்; அவனே எனக்கு நேர்வழி காட்டுகிறான்*. (26: 78)

• *அவனே எனக்கு உணவளித்து, தண்ணீர் பருகத் தருகிறான்*. (26: 79)

• *நான் நோயுறும் போது, அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்*. (26: 80)

• *அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் எனக்கு மீண்டும் உயிர் கொடுப்பான்*. (26: 81)
_________________________________
5 ) *தங்கள் சிலைகளால் எந்தப் பயனும் இல்லை* என்பதை உணர்ந்தும், *அவற்றை வணங்குவதற்கு இப்ராஹீம் (அலை) அவர்களின் சமூகம் கூறிய ஒரே காரணம்* என்ன?

*எங்கள் முன்னோர்கள் இவ்வாறு செய்வதை நாங்கள் கண்டோம்* என்பதே அவர்கள் கூறிய ஒரே காரணமாகும். (26:74)
__________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *