அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 206* ||

அத்தியாயம் 26 [ *அஷ்ஷுஅரா* – கவிஞர்கள் வசனங்கள் (41~60)]
________________________________
1 ) *ஃபிர்அவ்னின் கொலை மிரட்டலுக்கு*, (ஈமான் கொண்ட) சூனியக்காரர்கள் அளித்த *உறுதியான பதில் என்ன*?

(எங்களுக்கு) எந்தத் *தீங்கும் இல்லை*!

*நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்*. .

*இறைநம்பிக்கை கொண்டோரில் நாங்கள் முதன்மையானவர்களாக இருப்பதால்* …

*எங்கள் இறைவன் எங்களின் பாவங்களை எங்களுக்கு மன்னிப்பதையே விரும்புகிறோம்* என்று உறுதியாக பிரார்த்தனை செய்தனர். (26:50)
________________________________
2 ) *ஸஜ்தாவில் விழுந்த சூனியக்காரர்கள், தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தி* என்ன கூறினார்கள்?

மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய *அகிலத்தின் இறைவனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம்* என்று கூறினார்கள். (26:47-48)
________________________________
3 ) மூஸா (அலை) அவர்கள் *தமது கைத்தடியைப் போட்டபோது* என்ன அற்புதம் நிகழ்ந்தது? அதைக் கண்ட *சூனியக்காரர்கள் உடனடியாக என்ன செய்தார்கள்*?

மூஸா (அலை) அவர்களின் *கைத்தடி, சூனியக்காரர்கள் செய்த (மாய வித்தைகள்) அனைத்தையும் விழுங்கி விட்டது*. இதைக் கண்ட சூனியக்காரர்கள், உடனடியாக (*இறைவனுக்கு) ஸஜ்தாவில் விழுந்தனர்*. (26:45-46)
________________________________
4 ) *ஃபிர்அவ்னையும்* அவனது *கூட்டத்தாரையும் அல்லாஹ் எங்கிருந்து வெளியேற்றினான்*?

*தோட்டங்களையும், நீரூற்றுகளையும், பொக்கிஷங்களையும், மற்றும் மதிப்புமிக்க தங்குமிடங்களையும் விட்டும்* அல்லாஹ் வெளியேற்றினான். (26:57-58)
________________________________
5 ) *ஃபிர்அவ்னின் கூட்டத்தார் விட்டுச் சென்றவற்றுக்கு அல்லாஹ் யாரை வாரிசுகளாக்கினான்*?

*இஸ்ராயீலின் மக்களை* (பனூ இஸ்ராயீல்- بَنِىٓ إِسْرَٰٓءِيلَ )அவற்றுக்கு வாரிசுகளாக்கினான். (26:59)
________________________________
6 ) *மூஸா (அலை) அவர்களுக்கு, இறைவன் வழங்கிய கட்டளையும் எச்சரிக்கையும்* என்ன?

மூஸா (அலை) அவர்கள் *அல்லாஹ்வின் அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் (எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்* என்பதே அந்தக் கட்டளையும் எச்சரிக்கையும் ஆகும். (26:52)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *