அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 205* ||

அத்தியாயம் 26 [ *அஷ்ஷுஅரா* – கவிஞர்கள் வசனங்கள் (21~40)]
________________________________
1 ) *ஃபிர்அவ்னின் மிரட்டலுக்கு மூஸா (அலை) அவர்கள் எவ்வாறு பதிலளித்தார்*?

*தெளிவான ஒரு பொருளை (அத்தாட்சியை) நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா* (என்னைச் சிறைப்படுத்துவாய்)?” என்று கேட்டார்கள். (26:30)
________________________________
2 ) *தனக்கு உதவி செய்ததாக ஃபிர்அவ்ன் சொல்லிக் காட்டியதை*, மூஸா (அலை) அவர்கள் என்ன கேள்வியைக் கேட்டு மறுத்தார்கள்?

*இஸ்ராயீலின் மக்களை நீ அடிமைப்படுத்துவதற்கு (நியாயம் கற்பிக்கவா), எனக்குச் செய்த இந்த உதவியை சொல்லிக் காட்டுகிறாய்!* என்று கேட்டு மறுத்தார்கள். (26:22)
________________________________
3 ) *தர்க்கத்தில் பதிலளிக்க முடியாத ஃபிர்அவ்ன், மூஸா (அலை) அவர்களை என்ன கூறி அவமானப்படுத்தினான்*?

அவன், உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள உங்கள் தூதர் *பைத்தியக்காரர்* தான் என்று கூறி அவமானப்படுத்தினான்.(26:27)
_________________________________
4 ) மூஸா (அலை) அவர்களின் *அற்புதத்தை எதிர்கொள்ள ஃபிர்அவ்னின் சபையோர் கூறிய திட்டம்* என்ன?

மூஸா (அலை) அவர்களுக்கும் அவரது சகோதரருக்கும் அவகாசம் அளித்து, *நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் திறமையான ஒவ்வொரு சூனியக்காரனையும் ஒன்று திரட்டி வந்து அவருடன் போட்டி போட வைப்பதே* அத்திட்டம். (26:36-37)
__________________________________
5 ) மூஸா (அலை) அவர்களுக்கு எதிராகத் *தன் மக்களைத் தூண்டிவிடுவதற்காக ஃபிர்அவ்ன் கூறிய அரசியல் காரணம்* என்ன?

*தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார்* என்று கூறி, மூஸா (அலை) அவர்களை ஒரு *தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் காட்டினான்*. (26:35)
__________________________________
6 ) மூஸா (அலை) அவர்கள், *ஃபிர்அவ்னிடம் நிகழ்த்திக் காட்டிய இரண்டு அற்புதங்கள்* யாவை?

(i) தமது *கைத்தடியைக் கீழே போட்டபோது அது பெரிய பாம்பாக மாறிவை*.

(ii) *தம் கையை வெளியில் எடுத்தபோது, உடனே அது பார்ப்பவர்களுக்கு பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தவை* (26:32-33)
__________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *