அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 204* ||
அத்தியாயம் 26 [ *அஷ்ஷுஅரா* – கவிஞர்கள் வசனங்கள் (01~20)]
__________________________________
1 ) *நபிகளார் தம்மையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்படக் காரணம்* என்ன?
மக்கள் (*ஏகஇறைவனை) நம்பிக்கை கொள்ளவில்லையே என்பது தான்* அவர்களது கவலைக்குக் காரணம். (26:3)
__________________________________
2 ) *பூமியில் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள சான்றுகள்* என்ன? அந்தச் சான்றைக் கண்ட பிறகும் *மக்களில் பெரும்பாலோரின் நிலை* என்னவாக இருக்கிறது?
பூமியில், ஒவ்வொரு வகையான *சிறப்பான தாவரங்களையும் ஏராளமாக முளைக்கச் செய்திருப்பது* ஒரு சான்றாகும். எனினும், அதைக் கண்டும் அவர்களில் பெரும்பாலோர் *இறைநம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை*. (26:7-8)
_________________________________
3 ) இறைச் செய்தியைக் கூறியபோது, *ஃபிர்அவ்ன் மூஸா (அலை) அவர்களை தரம் தாழ்த்திக் குறை கூற என்னென்ன விஷயங்களைச்* சொல்லிக் காட்டினான்?
*நம்மிடம் குழந்தையாக இருந்தபோது உம்மை நாங்கள் வளர்க்கவில்லையா?*
*நீர் ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு நன்றி கெட்டவராக இருக்கிறீர்*” என்று கூறி, மூஸா (அலை) அவர்கள் செய்த பழைய தவறையும்,
*தனக்குக் கீழ் வளர்ந்ததையும் சொல்லிக் காட்டி அவரைத் தரம் தாழ்த்தினான்*. (26:18-19)
_________________________________
4 ) *ஃபிர்அவ்னிடம் சென்று என்ன கூறுமாறு மூஸா மற்றும் ஹாரூன் (அலை) அவர்களிடம் அல்லாஹ் கட்டளையிட்டான்*?
*நாங்கள் அகிலங்களின் இறைவனுடைய தூதர்கள்! எங்களுடன் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை அனுப்பிவிடு*!” என்று கூறுமாறு இறைவன் கட்டளையிட்டான். (26:15-17)
_________________________________
5 ) *ஃபிர்அவ்னிடம் செல்வதற்கு முன்பு, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் வெளிப்படுத்திய அச்சங்கள் யாவை*? (சிலவற்றைக் குறிப்பிடுக).
(i) அவர்கள் தன்னை *பொய்யர்* எனக் கூறுவார்கள் என அஞ்சினார்.
(ii) *நாவால் சரளமாகப் பேச வராது* எனத் தெரிவித்தார்.
(i) *தன் மீதுள்ள ஒரு குற்றச்சாட்டுக்காக அவர்கள் தன்னைக் கொன்று விடுவார்கள்* எனவும் அஞ்சினார்.(26:12-14)
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*