அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 203* ||

அத்தியாயம் 25 [ *அல்ஃபுர்கான்* – (பிரித்துக் காட்டுவது) வசனங்கள் (61~70)]

*அஸ்ஸலாமு அலைக்கும்* வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

நாள்: *21.06.2025*

||கேள்வி *21*||

அத்தியாயம் 25 [ *அல்ஃபுர்கான்* – (பிரித்துக் காட்டுவது) வசனங்கள் (61~70)]

A ) மேற்குரிய வசனங்களில் இடம்பெறும் *முஃமின்களின் பண்புகளை* பட்டியலிடவும்…!
_________________________________
1. அவர்கள் *பூமியில் பணிவாக நடப்பார்கள்*. (25:63)

2. அறிவீனர்கள் தம்முடன் (தர்க்கம் செய்ய) உரையாடும்போது, *ஸலாம்* (சாந்தி உண்டாகட்டும்) எனக் கூறி (அவர்களை விட்டும் விலகி) விடுவார்கள். (25:63)

3. தமது இறைவனுக்காக *ஸஜ்தா* (சிரவணக்கம்) செய்தும், நின்று வணங்கியும் இரவைக் கழிப்பார்கள். (25:64)

4. *நரகத்தின் வேதனையிலிருந்து தங்களைப் பாதுகாக்குமாறு* இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். (25:65)

5. செலவு செய்யும்போது, *வீண் விரயம் செய்யாமலும், கஞ்சத்தனம் செய்யாமலும், நடுநிலையைக் கடைப்பிடிப்பார்கள்*. (25:67)

6. அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் சேர்த்துப் பிரார்த்திக்க மாட்டார்கள் (*இணைவைக்க மாட்டார்கள்*).(25: 68)

7. அல்லாஹ் தடை செய்துள்ள *எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்*. (25:68)

8. *விபச்சாரம் செய்ய மாட்டார்கள்*. (25: 68)

9. (பாவம் செய்துவிட்டால்) *உடனடியாகத் திருந்தி, நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வார்கள்*. (25:70)
__________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *