அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 201* ||

அத்தியாயம் 25 [ *அல்ஃபுர்கான்* – (பிரித்துக் காட்டுவது) வசனங்கள் (41~50)]
__________________________________
1 ) *மழை எவ்வாறு அருளாகவும் வாழ்வாதாரமாகவும்* அமைகிறது?

*தனது அருளுக்கு முன் காற்றை நற்செய்தியுடன் அனுப்பி, வானத்திலிருந்து தூய்மையான தண்ணீரை அல்லாஹ் இறக்குகிறான். இறந்த ஊரை அதன் மூலம் உயிர்ப்பிக்கவும், கால்நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை புகட்டவும் செய்கிறான்* (25: 48-49).
_______________________________
2 ) *இரவு, உறக்கம், பகல்* எதற்காக படைக்கப்பட்டன?

*அல்லாஹ் இரவை ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும்* அமைத்தான் (25:47).
__________________________________
3 ) *மனிதர்களில் பெரும்பாலானோரின் நிலை* என்ன?

மனிதர்களில் அதிகமானோர் தங்களுக்கு வழங்கப்பட்ட *செவியையும், சிந்தனையையும் பயன்படுத்துவதில்லை* (25:44)

*இறைவனின் அத்தாட்சிகளை தெளிவுபடுத்தப்பட்டும்*, மனிதர்களில் அதிகமானோர் இறைவனை மறுப்போராகவே உள்ளனர். (25:50)
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *