அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 200* ||
அத்தியாயம் 25 [ *அல்ஃபுர்கான்* – (பிரித்துக் காட்டுவது) வசனங்கள் (31~40)]
__________________________________
1 ) *தீய மழை பொழியப்பட்ட ஊரின் வழியாகச் சென்றும்*, மக்கள் *ஏன் படிப்பினை பெறவில்லை* என்று அல்லாஹ் கூறுகிறான்?
அவர்கள், *மரணத்திற்குப் பின் திரும்ப எழுப்பப்படுவதை நம்பாமல் இருப்பதே* அதற்குக் காரணம்.(25:40)
__________________________________
2 ) *இறைத்தூதர்களைப் பொய்யாக்கிய சமுதாயங்களுக்கு* என்ன நேர்ந்தது என்பதை விவரிக்கவும் ?
*மூஸா* (அலை) மற்றும் *ஹாரூன்* (அலை) ஆகியோரின் வசனங்களைப் பொய்யாக்கிய கூட்டத்தை *அல்லாஹ் அடியோடு அழித்தான்* (25:36).
*நூஹ்* (அலை) சமுதாயம் தூதர்களைப் பொய்யர்களெனக் கூறியபோது *அவர்களை மூழ்கடித்து*, மனிதர்களுக்குப் படிப்பினையாக ஆக்கினான் (25: 37).
*ஆது, ஸமூது, பாழடைந்த கிணற்றுக்குரியோர்*, மற்றும் வேறு பல தலைமுறையினரும் (25:38) *அடியோடு அழிக்கப்பட்டனர்* (25:39).
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*