அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 199* ||

அத்தியாயம் 25 [ *அல்ஃபுர்கான்* – (பிரித்துக் காட்டுவது) வசனங்கள் (21~30)]
__________________________________
__________________________________
1 ) *மறுமை நாளில் அநீதி இழைத்தவர்களின் வருத்தமும், இறைத்தூதர்களின் கவலையும்* எவ்வாறு வெளிப்படும்?

அநீதி இழைத்தவன் தனது கைகளைக் கடித்து, *இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே* என்றும், *இன்னாரை நான் உற்ற நண்பனாக ஆக்காமல் இருந்திருக்கக் கூடாதா?* என்றும் வருத்தப்படுவான். தவறான நண்பர்கள் அவனை அறிவுரையைப் புறக்கணிக்கச் செய்ததாகவும், ஷைத்தான் மனிதனுக்கு துரோகி என்றும் கூறுவான் (25 27~29).

மறுபுறம், இறைத்தூதர், *என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்* என்று கவலைப்படுவார் (25:30).
__________________________________
2 ) *மறுமை நாளில் குற்றவாளிகளின் நிலையும், சொர்க்கவாசிகளின் நிலையும்* எவ்வாறு இருக்கும்?

மறுமை நாளில் குற்றவாளிகளுக்கு எந்த *நற்செய்தியும் இருக்காது*; அவர்கள் *(எல்லா வாய்ப்புகளும்) முழுமையாகத் தடுக்கப்பட்டு விட்டன* என்று கூறுவார்கள். அவர்களின் செயல்கள் *பரப்பப்பட்ட புழுதியாக ஆக்கப்படும்* (25:22-23).

மறுபுறம், *சொர்க்கவாசிகள் அழகிய தங்குமிடத்திலும், சிறந்த ஓய்விடத்திலும் இருப்பார்கள்* (25: 24).
__________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *