அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 197* ||
அத்தியாயம் 25 [ *அல்ஃபுர்கான்* – (பிரித்துக் காட்டுவது) வசனங்கள் (11~20)]
__________________________________
1 ) *வணங்கப்பட்ட தெய்வங்கள், மறுமை நாளில் தங்களை வணங்கியவர்களைப் பார்த்து* என்ன கூறிவிடுவார்கள்?
நீ தூயவன். உன்னையன்றி உற்ற நண்பர்களை ஏற்படுத்துவது எங்களுக்குத் தகாது. *நீ அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வசதிகளை அளித்தாய். (உன்னை) நினைக்க மறந்தனர். அழிந்து போகும் கூட்டமாக ஆகி விட்டனர்* என்று (வணங்கப்பட்ட) அவர்கள் கூறுவார்கள்.
நீங்கள் கூறியதை இவர்கள் பொய்யாக்கி விட்டனர் (என்று இணைகற்பித்தவர்களிடம் கூறிவிட்டு, *வணங்கப்பட்டவர்களை நோக்கி) தடுக்கவோ, உதவவோ உங்களுக்கு இயலாது. உங்களில் அநீதி இழைத்தோருக்குப் பெரிய வேதனையைச் சுவைக்கச் செய்வோம்* (என்று கூறப்படும்.) (25:18 & 19)
__________________________________
2 ) *சுவனத்தில், இறையச்சம் உடையவர்களுக்கு என்ன கிடைக்கும்* என்று அல்லாஹ் வாக்களிக்கிறான்?
அதில் அவர்கள் *விரும்பியதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும்* என்றும், அவர்கள் அதில் *என்றென்றும் தங்கி விடுவார்கள்* என்றும் அல்லாஹ் வாக்களிக்கிறான். (25:16)
__________________________________
3 ) *நரக நெருப்பை நெருங்கும்போதும், அதில் வீசப்படும்போதும் குற்றவாளிகளின் நிலை* எவ்வாறு இருக்கும்?
தொலைவிலிருந்து நரகத்தைப் பார்க்கும்போதே *அதன் சீற்றத்தின் இரைச்சலைக் கேட்பார்கள்*. கை, கால்கள் விலங்கிடப்பட்டு அதன் நெருக்கடியான இடத்தில் வீசப்பட்டவுடன், அங்கே தங்களுக்கு அழிவு நேரட்டும் என அழைக்கத் தொடங்குவார்கள். (25:12-13)
__________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*