அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 197* ||
அத்தியாயம் 25 [ *அல்ஃபுர்கான்* – (பிரித்துக் காட்டுவது) வசனங்கள் (01~10)]___________________________________
1 ) *இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதராக இருந்ததை இறைமறுப்பாளர்கள்* எவ்வாறு *கேலி செய்தார்கள்*? (ஏதேனும் இரண்டைக் குறிப்பிடுக)
(a) *இத்தூதருக்கு என்ன ஆனது*?
*இவர் உணவு உண்கிறார்; கடைத் தெருக்களில் நடக்கிறார்.*
(b) *இவருடன் சேர்ந்து எச்சரிப்பதற்காக ஒரு வானவர் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?* என்று கூறி கேலி செய்தனர். (25:7-8)
___________________________________
2 ) *இவ்வேதத்தின் மீதான இறைமறுப்பாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு* நபி (ஸல்) அவர்கள் என்ன *பதில் கூறுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்*?
*வானங்கள், பூமியில் உள்ள இரகசியத்தை அறிபவனே இதனை (குர்ஆனை) அருளினான்*. அவன் *மன்னிப்பு மிக்கவனாகவும் நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்* என்று கூறுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். (25:6)
___________________________________
3 ) *அல்லாஹ்வையன்றி ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட மற்ற கடவுள்களின் இயலாமையாகக்* கூறப்படுவது என்ன?
அவர்களால் எதையும் *படைக்க முடியாது*; மாறாக *அவர்களே படைக்கப்பட்டவர்கள்*. மேலும், *தமக்கு நன்மை தீமை செய்யவோ, மரணம், வாழ்வு, மற்றும் உயிர்த்தெழச் செய்தல் ஆகியவற்றின் மீது அதிகாரம் செலுத்தவோ அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்*. (25:3)
___________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*