அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 195* ||
அத்தியாயம் 24 [*அந்நூர்* (ஒளி) வசனங்கள் (51~60)]
__________________________________
1 ) *தங்களுக்கு இடையிலான வழக்குகளில் தீர்ப்புக்காக அழைக்கப்படும்போது*, இறைநம்பிக்கையாளர்களின் பதில் என்னவாக இருக்கும்?
*நாங்கள் செவியேற்றோம்; (அதற்குக்) கீழ்ப்படிந்தோம்!* என்று கூறுவதே அவர்களின் பதிலாக இருக்கும்.(24:51)
__________________________________
2 ) *எதனால் முஃமின்கள் கிருபை செய்யப்படுவார்கள்*?
(a) *தொழுகையை நிலைநிறுத்துவதால்*..
(b) *ஸகாத்தைக் கொடுப்பதால்*
(c) *தூதருக்குக் கட்டுப்படுவதால்*
இந்த மூன்று முக்கிய வழிபாடுகளையும், கடமைகளையும் நிறைவேற்றுவதன் மூலம் *அல்லாஹ்வின் அருளைப்(கிருபை*) பெற முடியும் (24:56)
__________________________________
3 ) *இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிபவர்களுக்கு* அல்லாஹ் கொடுக்கும் வாக்குறுதி என்ன?
(a) *பூமியில் ஆட்சியதிகாரம் வழங்குவதாக முன்னோர்களுக்கு வழங்கியது போலவே*..
(b) *அல்லாஹ் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிலைப்படுத்துவதாக*..
(c) அவர்களின் *அச்சத்திற்குப் பின் (அதை) அவர்களுக்குப் பாதுகாப்பு நிலையாக* மாற்றுவதாக..
இதற்கு பதிலாக, இறைநம்பிக்கையாளர்கள் *அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது*. என்றும் அல்லாஹ் கூறுகிறான். (24:55)
__________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*