அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 194* ||
அத்தியாயம் 24 [*அந்நூர்* (ஒளி) வசனங்கள் (41~50)]
___________________________________
1 ) *நயவஞ்சகர்கள் நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பைப் புறக்கணிப்பதற்கான காரணங்களாக அல்லாஹ் என்னென்ன சந்தேகங்களைக் கேட்கிறான்*? இறுதியில் அவர்களைப் பற்றி என்ன கூறுகிறான்?
அவர்களின் *உள்ளங்களில் நோய் இருக்கிறதா*, அவர்கள் *சந்தேகப்படுகிறார்களா*, அல்லது *அல்லாஹ்வும் அவனது தூதரும் தமக்கு அநியாயம் செய்துவிடுவார்கள் என அஞ்சுகிறார்களா* என்று அல்லாஹ் கேட்கிறான்.
இறுதியில், இவர்கள்தான் *அநியாயக்காரர்கள்* என்று அல்லாஹ் தீர்ப்பளிக்கிறான். ( 24:50)
___________________________________
2 ) *அல்லாஹ்வை போற்றுவது யார் யார்*?
*வானங்கள், பூமியில் உள்ளவை* மற்றும் *இறக்கைகளை விரித்த நிலையில் பறவைகள் அனைத்தும் அல்லாஹ்வைப் போற்றுகின்றன*. ஒவ்வொன்றும் தமது தொழுகையையும், போற்றுதலையும் அறிந்துள்ளன.(24:41)
___________________________________
3 ) *மேகம், மழை மற்றும் ஆலங்கட்டி மழை எவ்வாறு உருவாகிறது* என்று குர்ஆன் வர்ணிப்பது என்ன?
அல்லாஹ்வே மேகத்தை இழுத்துச் சென்று, அதனை ஒருங்கிணைத்து, அடர்த்தியாக ஆக்குகிறான். *அதன் நடுவிலிருந்து மழை வெளிப்படுகிறது. மேலும், வானிலுள்ள மேகங்களால் ஆன மலைகளிலிருந்து ஆலங்கட்டி மழையைப் பொழியச் செய்கிறான்*. (24:43)
___________________________________
4 ) *இறைநம்பிக்கையற்றவர்கள் யார்?*
*அல்லாஹ்வையும், தூதரையும் நம்பினோம்; கட்டுப்பட்டோம்* என்று கூறிய பின்னர், *புறக்கணிப்பவர்களை இறைநம்பிக்கையற்றவர்கள்* எனக் (24:47) வசனம் குறிப்பிடுகிறது.
___________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*