அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 191* ||

அத்தியாயம் 24 [*அந்நூர்* (ஒளி) வசனங்கள் (11~20)]
_________________________________
1) (அவதூறு விஷயத்தில்) *வஹீ தாமதமானபோது, ஆயிஷா (ரலி) அவர்களைப் பிரிந்து விடுவது குறித்து நபி (ஸல்) அவர்கள் யாரிடம் ஆலோசனை கேட்டார்கள்*? அவர்கள் கூறிய ஆலோசனை என்ன?

நபி (ஸல்) அவர்கள் *அலீ பின் அபீ தாலிப்* (ரலி) மற்றும் *உஸாமா பின் ஸைத்* (ரலி) ஆகியோரிடம் ஆலோசனை கேட்டார்கள்.

(i) *உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் ஆலோசனை:*

அல்லாஹ்வின் தூதரே! *தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்* என்று கூறினார்கள்.

(ii) *அலீ (ரலி) அவர்களின்* ஆலோசனை:

“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். *பணிப் பெண்ணைக் கேளுங்கள், அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்* என்று கூறினார்கள்.
___________________________________
2) ஆயிஷா (ரலி) அவர்களை பற்றி (அவதூறு விஷயத்தில்), *ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் விசாரித்தபோது* என்ன கூறினார்கள்?

நபி (ஸல்) அவர்களின் மற்றொரு மனைவியும், ஆயிஷா (ரலி) அவர்களின் போட்டியாளராகவும் இருந்த ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள், *அல்லாஹ்வின் தூதரே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்துக் கொள்வேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன்* என்று பதிலளித்தார்கள்.
___________________________________
3) வஹீ வருவதற்கு முன்பு, நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் *பாவம் செய்திருந்தால் மன்னிப்புக் கோருமாறு* கூறியபோது, ஆயிஷா (ரலி) அவர்கள் என்ன பதில் கூறினார்கள்?

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், என் விஷயத்தில் எனக்கும் உங்களுக்கும் யூசுஃப் (அலை) அவர்களின் தந்தையையே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது):

*'(எனது நிலை) அழகிய பொறுமையே! நீங்கள் (பொய்யாக) வர்ணித்துக் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்*’ (அல்குர்ஆன் 12:18)” என்று கூறினார்கள்.
___________________________________
4) *ஆயிஷா (ரலி) அவர்கள் கற்பொழுக்கமுள்ளவர் (நிரபராதி*) என்று குர்ஆன் வசனங்கள் அருளப்பட்ட பிறகு, அவதூறு கூறியவர்களில் தண்டிக்கப்பட்டவர்கள் யாவர்?

அவதூறு கூறியவர்களில் மூன்று பேருக்கு கசையடி தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள்:

1. *ஹஸ்ஸான் பின் ஸாபித்* (ரலி)
2. *மிஸ்தஹ் பின் உஸாஸா* (ரலி)
3. *ஹம்னா பின்த் ஜஹ்ஷ்* (ரலி)
___________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *