அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 177* ||
அத்தியாயம் 22 *அல்ஹஜ்* – ஹஜ் எனும் வணக்கம் வசனங்கள் 11~30 வரை
1 ) *ஸயீத் பின் ஜுபைர்* (ரலி) அறிவித்த செய்தி…
மதீனாவுக்கு வந்து இஸ்லாத்தை ஏற்கும் சிலர், தங்கள் மனைவியர் ஆண் குழந்தைகள் பெற்றாலோ, குதிரைகள் குட்டி ஈன்றாலோ, “*இஸ்லாம் நல்ல மார்க்கம்*” என்பர்.
ஆனால், அவை நிகழாவிட்டால், “*இது கெட்ட மார்க்கம்*” எனக் கூறுவர். இவர்கள் தொடர்பாக (22:11) இறைவசனம் அருளப்பட்டது. (புகாரி 4742)
2 ) *யார் கெட்ட நண்பன் என்று அல்லாஹ் கூறுகிறான்?*
*யாருடைய தீமை நன்மையைவிட நெருக்கமாக இருக்கிறதோ*, அவனை அழைப்பவன் கெட்ட பாதுகாவலனும், கெட்ட நண்பனுமாவான். (22:13)
3) “*இவர்களே தமது இறைவனைப் பற்றித் தர்க்கித்த இரு பிரிவினராவர்*” (22:19) என்ற வசனம் எதைக் குறிக்கிறது?
இவ்வசனம் பத்ருப் போரில் முஸ்லிம்களான *ஹம்ஸா, அலீ, உபைதா பின் ஹாரிஸ்* (ரலி) மற்றும் *இறைமறுப்பாளர்களான உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா* ஆகியோர் தொடர்பாக அருளப்பட்டது.
(புகாரி 3969, முஸ்லிம் 5771)
கேள்வி -21
நேற்று கேட்க்கப்பட்ட கேள்விக்கான பதில்கள்
4 ) *இம்மையில் ஆண்கள் பட்டாடை ஏன் அணியக்கூடாது*?
ஆண்கள் இம்மையில் பட்டாடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது, ஏனெனில் *இவ்வுலகில் பட்டாடை அணிபவர் மறுமையில் அதை அணிய மாட்டார்*
(புஹாரி 5834, முஸ்லிம் 4202).
5 ) *பயணம் செய்வதற்கு சிறந்த இடம்* எது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நபி (ஸல்) அவர்கள், பயணத்திற்கு சிறந்த இடங்கள் *தமது பள்ளிவாசல் (மஸ்ஜிதுன் நபவி) மற்றும் பைத்துல் அதீக் (கஅபத்துல்லாஹ்)* என்று கூறினார்கள்
(அஹ்மத் 14255, இப்னு ஹிப்பான் 1616, நஸாயீ-குப்ரா 11284, முஸ்னத் அபீ யஃலா 2266).
6) *எதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்* என்று அல்லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ், *சிலைகளின் அசுத்தத்தையும் பொய்ப் பேச்சுகளையும் விட்டு விலகிக் கொள்ளுமாறு* கூறுகிறான் (22:30).
7 ) *உளு செய்தால் மறுமையில் கிடைக்கும் பலன் என்ன?*
உளு செய்வதற்கான பலனாக, *மறுமையில் இறைநம்பிக்கையாளர்களின் உறுப்புகளில் உளூவின் நீர் பட்ட இடங்களில் நகைகள் அணிவிக்கப்படும்* (22:23).
(முஸ்லிம் 420, நஸாயீ 149, அஹ்மத் 6869).
___________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*