அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 174* ||

அத்தியாயம் 21 *அல் அன்பியா-நபிமார்கள்* (வசனங்கள் 71- 90 வரை)

1 ) லூத்து நபிக்கு அல்லாஹ் வழங்கியது..
அல்லாஹ் லூத்து நபிக்கு *ஞானத்தையும் கல்வியையும்* வழங்கினான். (21:74)

2 ) *சுலைமான் (அலை) ஞானத்துடன் தீர்த்த விவகாரம்*…
சுலைமான் (அலை) *இரு பெண்களின் மகன் தொடர்பான தகராறை ஞானத்துடன் தீர்த்தார். குழந்தையைப் பிளப்பதாகக் கூறி, உண்மையான தாயின் அன்பை அடையாளம் கண்டு, குழந்தை இளையவளுக்கு உரியது எனத் தீர்ப்பளித்தார்*. (21:79)
ஹதீஸ்: (புஹாரி 3427, முஸ்லிம் 3543)

3 ) *இப்ராஹீம் மற்றும் அவரது சந்ததிகளுக்கு அல்லாஹ் கொடுத்தது*…
இப்ராஹீம் நபிக்கு *இஸ்ஹாக்கையும், கூடுதலாக யஃகூபையும் பரிசாக அளித்தான். அனைவரையும் நல்லவர்களாக ஆக்கினான்*. (21:72)

4 ) *சுலைமான் நபிக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தவை*..
அல்லாஹ் சுலைமான் நபிக்கு வேகமாக வீசும் *காற்றை வசப்படுத்திக் கொடுத்தான்*, அது அவரது ஆணைப்படி அருள் வளம் செய்யப்பட்ட பூமியை நோக்கி வீசியது (21:81).

மேலும், *கடலில் முத்துக் குளிக்கும் ஷைத்தான்களையும், வேறு வேலைகள் செய்யும் ஷைத்தான்களையும் வசப்படுத்திக் கொடுத்தான்* (21:82).

5) *யூனுஸ் நபி மற்றும் ஸக்கரிய்யா நபியின் பிரார்த்தனைகள்*…

யூனுஸ் நபி:

(لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ)*

லா இலாஹ இல்லா அன்த, சுப்ஹானக, இன்னீ குன்து மினல் ளாலிமீன்*”

(உன்னைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை; நீ தூயவன்; நான் அநியாயக்காரர்களில் ஆகிவிட்டேன்) (21:87).

ஸக்கரிய்யா நபி:

(رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ)

ரப்பி லா ததர்னீ ஃபர்தன் வ அன்த்த ஃஹைருல் வாரிஸீன்

(*என் இறைவனே! என்னைத் தன்னந்தனியாக விட்டுவிடாதே! நீயே உரிமையாளர்களில் மிகச் சிறந்தவன்)*” (21:89).

6) *இஸ்மாயீல், இத்ரீஸ், துல்கிஃப்ல் நபிமார்களை* பற்றி குறித்து அல்லாஹ் கூறுவது…
அவர்கள் *பொறுமையாளர்களில் உள்ளவர்கள்* (21:85).

அல்லாஹ் அவர்களை தனது *அருளில் நுழைத்தான்*, அவர்கள் நல்லோரில் உள்ளவர்கள் (21:86).
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *