அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 171* ||

அத்தியாயம் 21 *அல்-அன்பியா – நபிமார்கள்* (வசனங்கள் 1 – 30 வரை)

1) *மக்கள் நபியை எப்படிக் குற்றம் சுமத்துகிறார்கள்*?
மக்கள் நபியை “*மனிதரைத் தவிர வேறில்லை*” (21:3) என்றும், அவரது செய்தியை “*குழப்பமான கனவுகள்”*, “*புனைந்த கதை*”, அல்லது “*கவிஞரின் படைப்பு*” (21:5) என்று குற்றம் சாட்டுகின்றனர். மேலும், முன்னோருக்கு வழங்கப்பட்ட *சான்றுகளைக்* கோருகின்றனர் (21:5)

2) *முந்தைய மக்கள் தூதர்களை நம்பியதுண்டா*?
முந்தைய ஊரார்கள், அழிக்கப்பட்டவர்கள், *இறைநம்பிக்கை கொள்ளவில்லை* (21:6). ஆகவே, தூதர்களை நம்பியதற்கு வாய்ப்பில்லை

3) *அறியாதவர்களுக்கு இறைவன் கூறும் ஆலோசனை என்ன*?
அறியாதவர்கள் *வேத அறிவுடையோரிடம் கேட்குமாறு* இறைவன் ஆலோசனை தருகிறான் (21:7).

4 ) *குர்ஆனின் நோக்கம் என்ன*?
குர்ஆன் மனிதர்களுக்கு *நற்போதனை வழங்குவதற்காக அருளப்பட்டது*, மேலும் *சிந்திக்கத் தூண்டுவது* அதன் நோக்கம் (21:10).

ஹதீஸ் குறிப்பு: நஸாயீ – குப்ரா (111269).

5 ) *வானத்துக்கும் பூமிக்கும் யாரை, எதற்காகப் படைக்கவில்லை*?

அல்லாஹ் வானத்தையும், பூமியையும், அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவற்றையும் *கேளிக்கையாக அல்லது விளையாட்டாகப் படைக்கவில்லை*. (21: 16-17)

6 ) *இரவிலும் பகலிலும் யார், யாரை போற்றுகின்றனர்?*

வானங்களில் உள்ள *வானவர்கள் (மலக்குகள்) சோர்வடையாமல் இரவிலும் பகலிலும்* அல்லாஹ்வைப் போற்றுகின்றனர். (21: 20)

7 ) *உண்மை – பொய்யை எப்படி அழிக்கிறது?*

அல்லாஹ் சத்தியத்தை (*உண்மையை) அசத்தியத்தின் (பொய்யின்) மீது எறிகிறான்*. அப்போது அது அசத்தியத்தை உடைத்து விடுகின்றது, *உடனே அசத்தியம் அழிந்து விடுகிறது*. (21: 18)

8 ) *ஒவ்வொரு நபிக்கும் அளிக்கப்பட்ட ஒரே செய்தி என்ன?*
ஒவ்வொரு நபிக்கும் அளிக்கப்பட்ட செய்தி:

*என்னைத் தவிர வேறெந்தக் கடவுளும் இல்லை! எனவே, என்னையே வணங்குங்கள்*!” (21: 25)

9 ) *மலக்குகளின் பண்பு பற்றி என்ன கூறப்படுகிறது*?
மலக்குகள் *கண்ணியமிக்க அடியார்கள், அல்லாஹ்வை முந்திக் கொண்டு பேச மாட்டார்கள், அவனது ஆணைப்படி செயல்படுவார்கள், அவனுக்கு அஞ்சி நடுங்குவார்கள், அவன் பொருந்திக் கொண்டோருக்கு மட்டுமே பரிந்துரைப்பார்கள்*. (21: 26-28)

10 ) *அல்லாஹ் பிரித்தெடுத்தது என்ன*?
அல்லாஹ் *வானங்களையும் பூமியையும் பிரித்தெடுத்தான்*, அவை முன்பு பிணைந்திருந்தன. (21: 30)
_______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *