*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 17* ||
[ஆலு இம்ரான் (அத்தியாயம் *3* வசனங்கள் *181-190* வரை)]
1. எது *உறுதிமிக்க செயல்களில்* ஒன்று?
2. *ஒருவரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை பறிக்க இன்னொருவர் முயற்சி செய்தால் என்ன தண்டனை* கொடுக்குமாறு நபிகளார் கட்டளையிட்டார்கள்?
3. *வெற்றி அடைந்தோர் யார்?*
4. ஏமாற்றக்கூடிய *அற்ப இன்பம்* எது?
————————–
1) *இறைநம்பிக்கையாளர்ளுக்கு எதிரிகளால் எண்ணற்ற இன்னல்கள் ஏற்படும் போது* இறையச்சதோடு பொறுமயுடன் இருப்பது உறுதிமிக்க செயல்களில் ஒன்றாக அல்லாஹு கூறுகிறான்.
*பொறுமையை மேற்கொண்டு*, *இறையச்சத்துடன்* நடந்தால் அதுவே உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும். (3:186)
________________________
2)*கழுத்தை வெட்டுதல்* (மரண தண்டனை) முஸ்லிம் 3759
________________________
3) *யார் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டு, சுவனத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவரே உண்மையில் வெற்றி அடைந்தவர்*
நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டுச் சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுபவர் வெற்றி பெற்று விட்டார். 3:185
________________________
4)*இவ்வுலக வாழ்க்கை*
*இவ்வுலக வாழ்வென்பது ஏமாற்றக்கூடிய அற்ப இன்பமேயன்றி வேறில்லை!* (3:185)
________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*