அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 167* ||

அத்தியாயம் 20 – தாஹா (طٰهٰ‌)
31- 60 வசனங்கள் வரை.

1) *முஸா (அலை) அதிகமான ஆண்டுகள் யாருடன் வாழ்ந்தாக* அல்லாஹ் கூறுகிறான்.

*மத்யன்வாசிகளோடு* ( 20:40)

2) மேற்குறிப்பிட்ட வசனங்களில் *யாருக்கு வஹி அறிவித்ததாக* அல்லாஹ் கூறுகிறான்?

*மூஸா (அலை) தாயாருக்கு* ( 20:38)

3) *எந்த விசயத்திற்க்காக மூஸா (அலை ) அவர்கள் கவலைபட்டார்கள்?*.

*மூஸா (அலை) தான் செய்த கொலைக்கு* .( 20:40)

4 ) *அல்லாஹ் யார் என்பதற்க்கு மூஸா நபி* கொடுத்த விளக்கம் என்ன?

*ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய வடிவத்தைக் கொடுத்து, பின்னர் வழிகாட்டினானே* அவன்தான் எங்கள் இறைவன் (20:50)

5 ) *ஹெராக்கிளியஸ் மன்னர்* எந்த நாட்டை சார்ந்தவர்?

*ரோமாபுரியின் அதிபர்* (இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி (7), முஸ்லிம் (3637)

6 ) *மூஸா நபியும் ஃபிர்அவ்னும் போட்டிக்காக என்னென்ன விதிகளை போட்டு கொண்டார்கள்*?

a) *இருவருக்கும் மைய்யமான(பொதுவான) இடம்*.

b) *குறிப்பிட்ட நேரம்*,

c) *மக்கள் எல்லோரும் ஒன்று சேர்வதற்க்கு ஏற்றவாரு முற்பகல்( லுஹா) நேரம்*,

d) *பண்டிகை நாள் ( யவ்முஸ் ஸீனத்*)

e) *இருவரும் இதில் மாறு செய்ய ( மீறக்/ பின்வாங்க)கூடாது*.( 20;58,59)

*கவனிக்க வேண்டிய விசயம்*:

நான் தான் ரப்பு என சொல்லி வரம்பு மீற கூடிய ஃபிர்அவ்ன் எந்த அளவுக்கு சரியான ஒப்பந்ததை போட்டுள்ளான் என்பதும். அதிலும் மாறு செய்ய கூடாது என்ற வாசகத்துடன்.

7 ) *அல்லாஹ் நம்மை பூமியோடு மூன்று முறை தொடர்புபடுத்துகிறான்* அவை என்ன?

படைப்பு: *பூமியிலிருந்து மனிதர்களைப் படைத்தல்* (20:55).

மரணம்: *மரணத்திற்குப் பின் பூமியில் மீண்டும் கொண்டு சேர்த்தல்* (20:55).

மறுமை: *மறுமை நாளில் பூமியிலிருந்து மீண்டும் வெளிப்படுத்துதல்* (20:55).
____________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *