அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 165* ||

அத்தியாயம் 19 – மர்யம் , *71 ~100 வசனங்கள் வரை.

1 ) 19:77 வது வசனம் யார் பற்றி அருளபட்டது.

*ஆஸ் பின் வாயில்*

[அறிவிப்பவர்: கப்பாப் (ரலி), நூல்கள்: புகாரி (2091), முஸ்லிம் (5387)]

2) *உங்களில் யாரும் அதைக் கடந்து செல்லாமல் இருக்க முடியாது* என்பது எதை குறிப்பிடுகிறது?

*நரகத்(பாலத்)தை*

[ (அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி (7439)]

நேரம் கிடைக்கும் போது புகாரி 7439 முழுமையான ஹதிஸ் படிக்கவும்)

3 ) *நாம் நேர்வழியில் நடக்கும் போது நமக்கு அல்லாஹ்* என்ன உதவி செய்கிறான்?

*நேர்வழியை அதிகப்படுத்துகிறான்* ( 19:76)

4 ) *அர்ரஹ்மான் மீது நிராகரிப்பாளர்கள் எத்தகைய அபாண்டத்தை* கொண்டு வந்துள்ளார்கள்?

அர் ரஹ்மான் *பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்* என்ற அபாண்டத்தை கொண்டு வந்துள்ளார்கள் (19:88)

5 ) *அல்லாஹ் ஒருவரை நேசிக்கும் போது* யாரெல்லாம் நேசிப்பார்கள்?

*ஜிப்ரீல் (அலை), விண்ணகத்தார்கள் (வானவர்கள்), மற்றும் பூமியில் வசிப்பவர்கள் அவரை நேசிப்பார்கள்*. (புகாரி 6040,
முஸ்லிம் 5135, திர்மிதி 3457).

6 ) *அல்லாஹ் எதனால் சந்ததிகளை ஏற்படுத்தி கொள்ளவில்லை*?

*அளவற்ற அருளாளனின் மகத்துவத்திற்கும் தனித்தன்மைக்கும் தகுதியற்றது*.

அவன் எல்லாவற்றையும் சூழ்ந்தறிந்தவன் மற்றும் அனைவரையும் அடிமைகளாக ஆக்கியவன்.
ஆதாரம்: (19: 92-93), (முஸ்லிம் 5401, 5402).
________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *