அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 164* ||
அத்தியாயம் 19 – மர்யம் , *34 ~ 70* வசனங்கள் வரை.
1 ) *மறுமை நாளில் மரணம் எந்த வடிவத்தில்* கொண்டு வரப்படும்?
*கருமை கலந்த வெள்ளாட்டின் தோற்றத்தில்*
[அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரி (4730), முஸ்லிம்(5475)]
2 ) *ரஹ்மானுக்கு மறுசெய்பவன் யார்*?
*ஷைத்தான்* (19:44)
3 ) *இப்ராகிம் நபி எந்த விசயத்திற்காக* தன் தந்தையை பற்றி பயந்தார்?
*என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து*
*உமக்குத் தண்டனை ஏற்படுவதையும்,*
*நீர் ஷைத்தானின் கூட்டாளியாக ஆவதையும் நான் அஞ்சுகிறேன்* (என்றும் கூறினார்.)( 19:45)*
4 ) *அழிவை சந்திப்பவர்கள் யார்*?
*தொழுகையைப் பாழாக்கி, சுய விருப்பங்களைப் பின்பற்றியவர்கள் அழிவைச் சந்திப்பார்கள்*. (19:59).
5 ) நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், *அதிகமாக சந்திக்க மாட்டீர்களா?* என கேட்டார்கள். இது விசயமாக அருளபட்ட வசனம் எது?
*நபியே! உமது இறைவனின் ஆணையின்றி நாங்கள் இறங்க மாட்டோம்* (19:64)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், *தாங்கள் (இப்போது) எம்மைச் சந்தித்துக் கொண்டிருப்பதைவிட அதிகமாக (அடிக்கடி) சந்திக்க மாட்டீர்களா?* என்று (ஆர்வமுடன்) கேட்டார்கள்.
அப்போது, *(நபியே!) உமது இறைவனின் ஆணையின்றி நாங்கள் இறங்க மாட்டோம்*.
எங்களுக்கு முன்னுள்ளவையும், பின்னுள்ளவையும், அவற்றுக்கு இடைப்பட்டவையும் அவனுக்கே சொந்தம். *உமது இறைவன் எதையும் மறப்பவன் அல்ல!* (என ஜிப்ரீல் கூறினார்) என்ற (19:64) இறைவசனம் அருளப்பட்டது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்கள்: புகாரி (3218), திர்மிதீ (3083), அஹ்மத் (1939)
6 ) *மறுமை நாளில் அல்லாஹ் யாரை தனியாக பிரித்தெடுப்பதாக கூறுகிறான்*?
*அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்வதில் ஒவ்வொரு கூட்டத்திலும் யார் மிகக் கடுமையாக இருந்தார்களோ* அவர்களை (19:69)
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*