அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 162* ||

அத்தியாயம் *18 அல்கஹ்ஃப்* (குகை) வசனங்கள் 101- 111 வரை.

1) *சொர்க்கத்தின் மிகச் சிறந்த மற்றும் உயர்ந்த படித்தரம் எது*?

*ஃபிர்தவ்ஸ்*

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்கள்: புகாரி (7423), திர்மிதீ (2454), இப்னுமாஜா (4322), அஹ்மத் (8068)

2 ) *அதிகமான அறிவு வழங்கபட்டவர்களாக வாதிட்டவர்கள் யார்*?

*யூதர்கள்* (இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: திர்மிதீ (3065), அஹ்மத் (2195)

3) *யூத, கிருஸ்தவ மற்றும் ஹரூரியாக்களுக்கான வேறுபாடு* என்ன?

*யூதர்கள்- முஹம்மத் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்தார்கள்.*

*கிறிஸ்தவர்கள் – சொர்க்கத்தை மறுத்தார்கள்; அங்கு உணவோ, பானமோ கிடையாது என்றார்கள்*

*ஹரூரிய்யாக்கள்- அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்தபின் அல்லாஹ்வுடன் தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறிப்பவர்கள்* என்று சொன்னார்கள்.

முஸ்அப் பின் ஸஅத்,
நூல்கள்: புகாரி (4728), நஸாயீ – குப்ரா (11251), ஹாகிம் (3400)

4) *இறைமறுப்பாளர்கள்( யூத , கிருஸ்தவ, ..,) இந்த உலகில் நிறைய தொண்டு நிறுவனங்கள், உதவிகள் செய்தாலும் அவர்களுக்கு மறுமையில் எந்த கூலியும் இல்லையென* கூறும் வசனம் எது?

*மறுமை நாளில் அவர்களுக்காக எந்த எடையையும் நிறுவ மாட்டோம்*. (18:105)
________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *