அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 161* ||

அத்தியாயம் *18 அல்கஹ்ஃப்* (குகை) வசனங்கள் 71- 100 வரை.

1) *கிள்ர் (அலை) அவர்கள் செய்த செயல்*?

*அல்லாஹ்வின் விருப்படி* (18:82)

2) *பெற்றோர்களை குப்ர்க்கு தள்ளிடுபவர்*?

*இளைஞன்* (பெற்றோரின் மகன் -18:80)*

3 ) *கிள்ர் ( அலை ) சரி செய்த சுவர்*?

*அந்நகரத்திலுள்ள இரு அநாதைச் சிறுவர்களுக்கு* உரியது (18:82)

4 ) *சேற்று தண்ணீரில் சூரியன் மறையும் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு துல்கர்னைன் அவர்கள் கூறிய அறிவுரை என்ன?*

*தீங்கு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.*

*நன்மை செய்பவர்கள் நல்ல கூலி உண்டு, மேலும் அவர்களுக்கு சட்டங்கள் எளிதானதாக இருக்கும்.*

*நாம் அநியாயம் செய்பவனைத் தண்டிப்போம்*. பின்னர் அவன் தன் இறைவனிடம் கொண்டு செல்லப்படுவான். அப்போது அவனை இறைவன் மிகக் கடுமையாகத் தண்டிப்பான். *இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்பவருக்கு நற்கூலி இருக்கிறது. நமது கட்டளையில் எளிதானதை அவருக்குக் கூறுவோம்* என்று (துல்கர்னைன்) கூறினார். (18:88)

5 ) *துல்கர்னைன் அவர்கள் சந்தித்த சமுதாயத்தினர் எத்தனை* ?

*மூன்று* ( 18: 86,90,93)

6 ) *யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் எவைகளுக்கிடையே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்*?

*இரண்டு மலைகளுக்கிடையே* (18:96)

7 ) *யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரை அல்லாஹ் எவ்வாறு அழிப்பான்?*

யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் *பிடரிகளில் புழுக்களை அல்லாஹ் அனுப்புவான். அதனால் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பலியாவார்கள்*. (முஸ்லிம் 5629)

8 ) *முஸ்லிம் ஹதிஸ் 5559 ல் யுக முடிவு நாளின் அடையாளங்கள் 10 ல் எத்தனை சொல்லப்பட்டுள்ளது?*

*9 அடையாளங்கள் சொல்லபட்டுள்ளன*

கூடுதல் ஒரு அடையாளம் *மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் இறங்குதல்*, இது ஹதிஸ் எண் முஸ்லிம் 5558 ல் கூறப்பட்டுள்ளன.
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *