அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 160* ||
அத்தியாயம் *18 அல்கஹ்ஃப்* (குகை ) வசனங்கள் 31- 60 வரை.
1 ) இந்த பூமியில் அல்லாஹ் *நமக்கு நல்ல வசதிகளை கொடுத்து இருந்தாலோ அல்லது வசதி வாய்ப்பான இடங்களுக்கு சென்றாலோ நாம் சொல்ல வேண்டியது* என்ன?
*மாஸா அல்லாஹ்*
*அல்லாஹ் நாடியதே நடக்கும்.*
*லா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்*
*அல்லாஹ்வின் உதவியின்றி (எங்களுக்கு) எந்த ஆற்றலும் இல்லை’* (18:39)
2 ) *ஸுன்துஸ்* மற்றும் *இஸ்தப்ரக்* இவைகள் என்ன ?
*ஸுன்துஸ் – மெல்லிய பட்டாடை*
*இஸ்தப்ரக் – தடித்த ( அடர்த்தியான ) பட்டாடை* ( 18:31)
3 ) *சொர்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலம் எது*? அதன் தமிழ் அர்த்தம் என்ன?
*லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்*
பொருள்: *அல்லாஹ்வைக் கொண்டே தவிர எந்த ஆற்றலும் அதிகாரமும் இல்லை*.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்கள்: புகாரி (7386), முஸ்லிம் (5240)
4 ) அல்லாஹ்விடம் கூலியிலும், ஆதரவு வைப்பதிலும் சிறந்தது எது?
*பாக்கியாத் சாலிஹாத்* ( நிலையான நற்செயல்கள்(18:46)
5 ) *கிதாப்பில் எவையெல்லாம் எழுதபட்டு இருக்கும்?*
*நல்ல செயல்கள் கெட்ட செயல்கள் அவை சிரியவை, பெரியவை அனைத்தும்* எழுதப்பட்டு இருக்கும் ( 8:49)
6 ) *மறுமை நாளில் மக்கள் எந்த நிலையில் திரட்டபடுவார்கள்*?
நீங்கள் மறுமை நாளில் *செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக* ஒன்று திரட்டப்படுவீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! (நிர்வாணமான) ஆண்களும், பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையாக இருக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி (6527), முஸ்லிம் (5491)
7 ) *இறைமறுப்பாளர்கள் சத்தியத்தை அழிக்க எதை கொண்டு தர்க்கம்* செய்வார்கள்?
*பொய்யை கொண்டு தர்க்கம் செய்வார்கள்* ( 8:56)
நேற்றைய (09/04/25) கேள்வி 09 க்கான பதில்.
8 ) *மூஸா நபியின் பணியாளர் பெயர்* என்ன , அவர்கள் *சந்திக்க சென்ற நபரின் பெயர்* என்ன?
பணியாளர் : *யூஷஉ பின் நூனை*
சந்தித்த நபர் : *களிர்* (அலை)
9 ) *மனிதர்களின் அறிவை அல்லாஹ்வுடைய அறிவுடன் ஒப்பிடுகையில் எந்த அளவு உள்ளது*?
*ஒரு சிட்டுக்குருவி வந்து மரக்கலத்தின் விளிம்பின்மீது விழுந்து, தன் (சின்னஞ்சிறு அலகால்) கடலில் ஒருமுறை உறிஞ்சி (நீர் அருந்தி)யது*.
அப்போது மூசா (அலை) அவர்களிடம் களிர் (அலை) அவர்கள் *“உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடுகையில், இந்தச் சிட்டுக்குருவி தன் அலகால் கடலிலிருந்து எடுத்த (நீரின்) அளவுதான் (நம் அறிவு)”* என்று சொன்னார்கள்.
____________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*