அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 159* ||

அத்தியாயம் *18 அல்கஹ்ஃப்* (குகை ) வசனங்கள் 01- 30 வரை.

1) பூமியின் மீதுள்ளவற்றை *அல்லாஹ் அழகா(ஸீனத்தா)க படைத்தது* எதற்க்காக?

*நல்ல செயல்களை செய்பவர் யார் என சோதிப்பதற்காக* ( 18:7)

2) *குகைவாசிகளின் பிரார்த்தனை* என்ன?

*رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةًۭ وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًۭا*

*எங்கள் இறைவனே! உன்னிடமிருந்து அருளை எங்களுக்குத் தருவாயாக! எங்கள் காரியத்தில் எங்களுக்கு நேர்வழியை எளிதாக்குவாயாக* (18:10)

3 ) *இளைஞர்கள் எதற்க்காக குகையில் தஞ்சமடைந்தார்கள்*?

*இளைஞர்களின் சமுதாயத்தினர் அல்லாஹ்வையன்றி வேறு கடவுள்களை எடுத்து கொண்டனர். ஆனால் அந்த இளைஞர்கள் சமுயாயத்தினர் வணங்குவதை வணங்கமாட்டோம், அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கமாட்டோம்* என்ற உறுதிபாட்டில் அவர்களிடம் இருந்து விலகி குகையில் தஞ்சம்மடைந்தார்கள் (18:14,15,16)

4 ) *பல ஆண்டுகள் தூங்குவதற்க்காக அல்லாஹ் செய்த ஏற்பாடு என்ன*?

*காதுகளில் அடைப்பு* ( 18:11)

மேலும் அவர்களை *பல ஆண்டுகள் துக்கத்தில் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு கண் விழித்திருந்த நிலையில் உறக்கம், வலது புறம் இடது புறம்மாக புரட்டுதல்* போன்ற ஏற்பாடுகளையும் அல்லாஹ் செய்து இருந்தாக கூறுகிறான் (18:18)

5 ) *பல ஆண்டுகள் தூங்கியவர்கள் விழித்ததும் எவ்வளவு நாள் தூங்கியதாக கூறிகொண்டார்கள்?*

*ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் தங்கியிருப்போம்* என்று (18:19)

6 ) *குகையில் தஞ்சமடைந்தாவர்கள் எத்தனை நபர்கள்*?

*அவர்களின் எண்ணிக்கையை என் இறைவனே நன்கறிந்தவன்* (18:22)

7 ) *கெட்ட பானம் என அல்லாஹ்* எதை சொல்கிறான்.

*நரகவாசிகளுக்கு வழங்கபடும் உருக்கபட்ட உலோகத்தை போன்ற தண்ணீர்*( 18:29)

8) *அல்லாஹ் எதற்க்காக பல ஆண்டுகள் இளைஞசர்களை தூங்க செய்து, பின்னர் அவர்களை எழுப்பி நகரத்திற்க்கு செல்லமாறு செய்தான்*?

*உலகம் அழிக்கப்படும் ,மரணித்தவர்கள் அனைவரும் உயிருடன் மீண்டும் எழுப்பபடுவார்கள் என்பதை அந்த ஊர் மக்கள் அறிந்து கொள்வதற்க்காக*.

அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதையும், *உலகம் அழியும் நேரமானது எந்தச் சந்தேகமும் இல்லாதது என்பதையும் அ(வ்வூரிலுள்ள)வர்கள் அறிந்து கொள்வதற்காக* (18:21)

9 ) “இன்ஷா அல்லாஹ் ” என்பதன் முக்கியத்துவத்தை எந்த வசனம் சொல்கிறது.

எந்த விஷயத்திற்கும் ‘*அல்லாஹ் நாடினால்’ (என்று சேர்த்துச் சொல்லியே) தவிர “நாளை நான் இதைச் செய்வேன்” என்று கூறாதீர்*!! நீர் மறந்து விட்டால் உமது இறைவனை நினைவுகூர்வீராக! “இதைவிட நெருக்கமானதற்கு என் இறைவன் எனக்குச் சரியான வழியைக் காட்டலாம்” என்று கூறுவீராக (18:23,24)
____________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *