அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 158* ||
அத்தியாயம் *17 [ஸுரா பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்) வசனம் 91- 111 வரை]*
1 ) *நபி ஸல் அவர்களிடம் நிராகரிப்பாளர்கள்* எதை கேட்டார்கள்?
a ) *ஒரு நீரூற்றைப் பூமியிலிருந்து பீறிட்டு ஓடச் செய்தல்,*
b ) *பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருந்து, அவற்றுக்கிடையே ஆறுகள் பாய்ந்தோடு செய்தல்*,
c ) *தங்கள் மீது வானத்தைத் துண்டு துண்டாக விழச் செய்ய வேண்டும்*.
d ) *தங்கள் முன்னிலையில் அல்லாஹ்வையும் வானவர்களையும் கொண்டு வர வேண்டும்*.
e ) *தங்கத்தினாலான வீடு உமக்கு இருக்க வேண்டும்.*
f ) *நீர் வானில் ஏறிச் செல்ல வேண்டும். தங்கள் படிக்கும் வகையில் ஒரு புத்தகத்தை எங்களிடம் கொண்டு வர வேண்டும்*. (17:90,91,92,93)
2 ) *குர்ஆன் சிறிது சிறிதாக அருளபட்டதின்* காரணம் என்ன?
*மக்களுக்கு அவகாசத்துடன்(சிறிது சிறிதாக) ஓதிக்காட்ட வேண்டும்* என்பதற்க்காக (17:106)
_______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*