அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 157* ||
அத்தியாயம் *17 [ஸுரா பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்) வசனம் 61- 90 வரை]*
1) *ஆதமுடைய மக்களுக்கு அல்லாஹ் வழங்கியவை* என்னென்ன?
*கண்ணியப்படுத்துதல்*: ஆதமின் மக்களை மரியாதையுடன் உயர்த்தினான் (17:70).
*பயண வசதி*: தரையிலும் கடலிலும் அவர்களைச் சுமந்து செல்லும் வாகனங்களை வழங்கினான் (17:70).
*தூய உணவு:* தூய்மையான பொருட்களிலிருந்து உணவு அளித்தான் (17:70).
*சிறப்பு*: படைப்புகளில் பலவற்றைவிட அவர்களை மிகவும் சிறப்பித்தான் (17:70).
*கடல் பயணம்*: அருளைத் தேடுவதற்காக கப்பல்களை கடலில் செலுத்தி உதவுகிறான் (17:66).
2) *அல்லாஹ்வை புறக்கணிப்பவர்கள் மீது அல்லாஹ் எவ்வாறு எல்லாம் தண்டணை* வழங்க இயலும் என அல்லாஹ் கூறுகிறான்?
*தரையில் புதைத்தல்*: தரைப்பகுதியில் அவர்களை புதைத்து அழிக்கலாம் (17:68).
*கல்மழை*: அவர்கள்மீது கல் மழையை அனுப்பி தண்டிக்கலாம் (17:68).
*புயல் காற்று*: கடலில் புயல் காற்றை அனுப்பி அவர்களை மூழ்கடிக்கலாம் (17:69).
*மூழ்கடித்தல்*: நன்றி மறந்ததால் கடலில் மீண்டும் அனுப்பி அழிக்கலாம் (17:69).
3) ஷைத்தான் யாரை *வேரறுத்து விடுவேன்* என கூறுகிறான்?
*ஆதமின் வழித்தோன்றல்கள்*: ஷைத்தான், ஆதமின் பிள்ளைகளை (மனிதர்களை) சிலரைத் தவிர வழிகெடுத்து வேரறுப்பேன் என வசனம் 62-ல் கூறுகிறான் (17:62).
4) *இப்லீஸிடம் எவற்றைக் கொண்டு எல்லாம் வழிகெடுக்க முடிந்தால் வழி கெடுத்து கொள்* என அல்லாஹ் கூறுகிறான்?
*சப்தம்*: அவனது குரல் (சப்தம்) மூலம் வழிதவறச் செய்யலாம் (17:64).
*குதிரைப்படை மற்றும் காலாட்படை*: இவற்றை மனிதர்கள்மீது ஏவி தாக்கலாம் (17:64).
*செல்வங்களில் பங்கு*: மனிதர்களின் செல்வங்களில் கூட்டாகி வழிகெடுக்கலாம் (17:64).
*குழந்தைகளில் பங்கு*: அவர்களின் குழந்தைகளில் தலையிட்டு வழிகெடுக்கலாம் (17:64).
*வாக்குறுதிகள்*: பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றலாம் (17:64).
5 ) *நபி (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு தொழுகை* எது? அந்த தொழுகை *எந்த நேரத்தில் தொழ அறிவுருத்தப்படுகிறது?*
நபி (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு தொழுகை *தஹஜ்ஜுத்* என்னும் *இரவுத்தொழுகை*
(நபியே!) இரவின் ஒரு பகுதியில், குர்ஆன் (ஓதுவதன்) மூலம் தஹஜ்ஜத் தொழுகையை நிறைவேற்றுவீராக! (இது) உமக்கு உபரியானதாகும்.([அல்குர்ஆன் 17:79]
6 ) *ஐந்து வக்த் தொழுகையை அல்லாஹ்* எவ்வாறு கூறுகிறான்? *பஜ்ர் தொழுகைக்கு உள்ள சிறப்பு* என்ன?
சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து, இரவின் இருள் சூழ்ந்திடும் வரையிலான தொழுகைகளையும், ஃபஜ்ர் (தொழுகையில்) ஓதுதலையும் நிலைநிறுத்துவீராக!
*பஜ்ர் சிறப்பு:* ஃபஜ்ர் தொழுகையில் *இரவு நேரத்து வானவர்களும், பகல் நேரத்து வானவர்களும் ஒன்றுசேர்கிறார்கள்* என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்கள்: திர்மிதீ (3060), இப்னுமாஜா (662), அஹ்மத் (9749)
7 ) *நபி(ஸல்) அவர்களை எதில் உறுதியாக்கப்பட்டார்கள்*?
*நபி(ஸல்) அவர்கள் உறுதியில்லாமை இருந்திருந்தால் தண்டனை எப்படி இருந்திருக்கும்* என அல்லாஹ் கூறுகிறான்?
நிராகரிப்பவர்கள் அவர்களின் பக்கம் சாயமல் உறுதியாக்கபட்டர்கள்
உம்மை நபி (ஸல்) வாழ்வில்* இரு மடங்கும், மரணத்தில் இரு மடங்கும் (வேதனையைச்) சுவைக்கச் செய்திருப்போம். பிறகு, நமக்கு எதிராக உமக்கு உதவுபவர் எவரையும் காண மாட்டீர்*! (17 : 74,75)
8 ) *மறுமையில் எந்த கையில் ஏடு கொடுக்கப்படுபவர் பாக்கியசாலி* ஆவார்?
*வலது கையில்* (17:71)
9 ) மக்கா வெற்றியின் போது நபி (ஸல்) அவர்கள் *காபாவில் உள்ள சிலைகளை உடைக்கும் போது கூறியது* என்ன?
*சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக் கூடியதாகவே உள்ளது* என்று கூறினார்கள். (17:81) (புகாரி 2478, முஸ்லிம் 3650)
________ ________ ________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*