அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 155* ||

அத்தியாயம் *17 [*ஸுரா பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்) வசனம் 01- 10வரை]*

1 ) நபி (ஸல்) அவர்களுக்கு மிஃராஜ் பயணத்திற்கு முன்பு அவர்களின் *இருதயத்தை பிளந்து மாற்றம் செய்தது உண்மையா?*


ஆம், *உண்மை.* நபி (ஸல்) அவர்களுக்கு மிஃராஜ் பயணத்திற்கு முன் அவர்களின் *மார்பு பிளக்கப்பட்டு, இதயம் சுத்திகரிக்கப்பட்டது*. (புகாரி 349), (முஸ்லிம் 263)

2 ) நபி (ஸல்) அவர்களுக்கு *மிஃராஜ் பயணத்தின் போது கொடுக்கப்பட்ட பாணங்கள் என்ன*? நபி (ஸல்) அவர்கள் தேர்ந்து எடுத்தது எந்த பாணம்?


மிஃராஜ் பயணத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு *மது (கம்ர்) மற்றும் பால் (லபன்)* ஆகிய இரு பாணங்களை கொண்டு வந்தார். நபி (ஸல்) பாலைத் தேர்ந்தெடுத்தார்கள். ஜிப்ரீல், “*இயற்கையைத் தேர்ந்தெடுத்தீர்*” என்று கூறினார். (புகாரி 3207), (முஸ்லிம் 259)

3 ) *நன்மையும் தீமையும் யாருடைய செயலால் தீர்மானிக்கப்படுகிறது*?


நன்மையும் தீமையும் ஒருவரின் சொந்த செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது. “*நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை; தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே*” என்று குர்ஆன் கூறுகிறது.  (17:7).

4 ) *மஸ்ஜிதுல் ஹரம் எழுப்பப்பட்டு எவ்வளவு காலத்தில் மஸ்ஜிதுல் அக்ஸா கட்டப்பட்டது* என நபி (ஸல்) கூறினார்கள்?


நபி (ஸல்) கூறினார்கள்:

மஸ்ஜிதுல் ஹரம் (கஅபா) கட்டப்பட்டு *40 ஆண்டுகள் கழித்து* மஸ்ஜிதுல் அக்ஸா கட்டப்பட்டது. (புகாரி 3366), (முஸ்லிம் 520).

5 ) அல்லாஹ் கூறும் *நற்செய்தி* என்ன?


நற்செயல்கள் செய்யும் *இறைநம்பிக்கையாளர்களுக்கு பெரும் கூலி (சொர்க்கம்) உண்டு* என்றும், *மறுமையை நம்பாதவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை (நரகம்) தயாராக உள்ளது* என்றும் அல்லாஹ் நற்செய்தி கூறுகிறான். (17:9-10).

6 ) அல்லாஹ்வின் பார்வையில் *இறைநம்பிக்கையாளருக்கும், இறை மறுப்பாளருக்கும் இடையே உள்ள வேறுபாடு* என்ன?

*இறைநம்பிக்கையாளர் மறுமையை விரும்பி, அதற்காக முயல்பவர்*; அவர்களின் முயற்சி நன்றி பாராட்டப்படும்   (17:19).

*இறை மறுப்பாளர் இவ்வுலகை மட்டும் விரும்புபவர்; அவருக்கு நரகம் காத்திருக்கிறது* (17:18).

7 ) மறுமையில் “*மனிதனின் ஏட்டை படித்து கணக்கு பார்ப்பது*” யார்?


*அவனுக்கு அவனே*   (17:14).

8 ) *பெற்றோருடன் எவ்வாறு உறவாட வேண்டும்*?

*பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும்*, அவர்களிடம் “சீ” என்று கூட சொல்லக்கூடாது, விரட்டக்கூடாது, கண்ணியமான சொற்களைப் பயன்படுத்த வேண்டும், கருணையுடன் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்*. (17:23-24)

9 ) *பெற்றோருக்கான பிரார்த்தனை* என்ன? (அரபி – தமிழ்)

رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

*என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது அவ்விருவரும் என்னை (பரிவுடன்) வளர்த்தது போல் நீ அவர்களுக்குக் கருணை காட்டுவாயாக*!”

(17:24)

10 ) *அல்லாஹ் பொருளாதாரத்தை எவ்வாறு கையாள வேண்டும்* என அறிவுறுத்துகிறான்?

*கஞ்சத்தனம் செய்யாமல் கையை முழுதும் கட்டி விடாது, வீண் விரயம் செய்யாமல் கையை முழுதும் விரித்து விடாது, மிதமான அளவில் செலவு செய்ய வேண்டும்*. அவன் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை வாரியும், அளவுடனும் வழங்குகிறான். (17:29-30)

செல்வத்தை ஜகாத் மூலம் தூய்மைப்படுத்தி, உறவினர், ஏழை, வழிப்போக்கருக்கு உரிமை வழங்க வேண்டும்; வீண் செலவு தவிர்க்கப்பட வேண்டும். (அஹ்மத் 11945)

____________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *