அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 152* ||

அத்தியாயம் 16

[ஸுரா *அந் நஹ்ல் -தேனீ* ) வசனம் 51- 80 வரை]

1 ) *எதை மறந்ததால் இணைவைக்கின்றனர்* என்று அல்லாஹ் கூறுகிறான்?

அல்லாஹ் வழங்கிய *அருட்கொடைகளுக்கு நன்றி மறந்ததால்* இணை வைக்கின்றனர். (16: 55)

2 ) *அல்லாஹ்வுக்கு என்ன குழந்தை உண்டு என இட்டு கட்டுகின்றனர்*?

*அல்லாஹ் என்ன குழந்தை பிறப்பது நற்ச்செய்தி என கூறுகிறான்*?

அல்லாஹ்வுக்கு *பெண் குழந்தைகள்* உண்டு என இட்டுக்கட்டுகின்றனர்.

*பெண் குழந்தை* பிறந்தால் நற்ச்செய்தி என அல்லாஹ் கூறுகிறான்

(16: 57-58)

3 ) கெட்ட தன்மை யாருக்குரியது?

கெட்ட தன்மை *மறுமையை நம்பாதவர்களுக்கு* உரியது. (16:60)

4 ) நபி (ஸல்) அவர்கள்

*எந்த மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு* எனக்கூறினார்கள்? அதில் எம்முறையிலான மருத்துவ வழிமுறையை தடை செய்தார்கள்?

i) *இரத்தம் வெளியேற்றும் கருவியால் கீறுவது*

Ii) *தேன் அருந்துவது*

iii) *நெருப்பால் சூடு போடுவது*

இவற்றில் *நெருப்பால் சூடு போடும் முறையை தடை செய்தார்கள்*.

(புகாரி: 5681)

5 ) *முதுமையின் காரணமாக மனிதனின் நிலை எவ்வாறு மாறும்* என அல்லாஹ் கூறுகிறான்?

*விபரம் தெரிந்த பின்னரும் நினைவு தடுமாறி எதையும் அறியாதவர்களாக மாறிவிடுவார்கள்* என அல்லாஹ் கூறுகிறான்.  ( 16:70)

6 ) *இன்றைய தினம் அவனே அவர்களின் நேசராவான்*. என அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?

*ஷைத்தானைக் குறிப்பிடுகிறான்*.

(16:63)

7 ) *16:64 வசனத்தில் எதற்காக குர்ஆன் அருளியதாக* அல்லாஹ் கூறுகிறான்?

மக்கள் கருத்து வேறுபாடு கொண்டதை தெளிவுபடுத்துவதற்காக

*இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு நேர்வழியாகவும் அருளாகவும்* குர்ஆனை அருளியதாக அல்லாஹ் கூறுகிறான்

(16:64)     

8 ) *வீடுகளின் மூலம் அல்லாஹ்  மனிதர்களுக்கு*  வழங்கும் அருட்கொடை என்ன?

(i) *நிம்மதி* தரக்கூடிய இடமாக வீடுகளை ஆக்கியுள்ளான்

(ii) *கால்நடைகளின் தோல்களால் குடில்கள் அமைக்க வழிவகை* செய்துள்ளான்

(iii) *பயணத்திலும், தங்கும் போதும் (குடிலினை)இலகுவாக பயன்படுத்த முடிகிறது பனி மற்றும் வெயிலில் ஆறுதலாக* உள்ளது (16:80)

9 ) *பறவை வானில்  பறப்பதினால் தரும் படிப்பினையை* கூறுக?

வான்வெளியில் பறவைகள் விழாமல் தடுத்து வைத்திருப்பது *அல்லாஹ்வின் வல்லமையே* (16: 79)

மேலும் அல்லாஹ் 67 ஸுராவில் பறவைக்கு எப்படி பறக்கிறது என விவரிக்கிறான்

*இறக்கைகளை விரித்தவாறும், மடக்கியவாறும் தமக்கு மேலாகப் பறக்கும் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா*? அவற்றை (விழாமல்) தடுத்து வைத்திருப்பவன் அளவிலா அருளாளனைத் தவிர யாருமில்லை. (67:19)

10 ) *அல்லாஹ் நன்றி செலுத்த வேண்டும்* என்பதற்காக வழங்கியவை என்ன என்ன?

செவிப்புலன்

*பார்வை*

*உள்ளங்கள்* (இதயம்) (16:78)

__________________________ *Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *