அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 151* ||
அத்தியாயம் 16
[ஸுரா *அந் நஹ்ல் -தேனீ* ) வசனம் 21- 50 வரை]
1 ) *இறைநம்பிக்கையாளர் செய்யும் நற்செயலுக்கும்
இறைமறுப்பாளர் செய்யும் நற்செயலுக்கும் உள்ள வேறுபாடு* என்ன?
*இறைநம்பிக்கையாள்ர் செய்யும் நற்செயலுக்கு கூலி இம்மையிலும் மறுமையிலும் வழங்கபடும்*
*இறை மறுப்பாளர்கள் நற்ச்செயலுக்கு இம்மையில் மட்டுமே கூலி வழங்கபடும்*
மறுமையில் எந்த. நன்மையும் இருக்காது
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: முஸ்லிம் (5408), அஹ்மத் (11790)
2 ) *தமக்கு தாமே அநியாயம் செய்தவர்கள்* என அல்லாஹ் பாரை கூறுகிறான்?
*கர்வம் கொண்ட இறை மறுப்பாளர்கள்* ( தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுத்தவர்கள்) (16:29)
3 ) *நல்லோர்களின் ரூஹ் கைப்பற்றும்போது வானவர்கள்* என்ன கூறுவார்கள்?
*உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்காக சொர்க்கத்தில் நுழையுங்கள்!* (16:32)
4 ) *அல்லாஹ்வின் நாட்டத்தால் தான் எப்படிப்பட்ட நிலையில் இருப்பதாக இணைவைப்போர்* கூறுகின்றனர்?
*அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி நாங்களும், எங்கள் முன்னோரும் எதையும் வணங்கியிருக்க மாட்டோம்*; எந்த ஒன்றையும் அவனன்றி தடை செய்திருக்க மாட்டோம்” (16:37)
5 ) *நபி(ஸல்) அவர்களின் பேராசை* என எதனை அல்லாஹ் கூறுகிறான்?
*மக்கள் நேர்வழி அடைய வேண்டும் என்பதே* அவர்களின் பேராசையாக இருந்தது (16:37)
6 )அல்லாஹ் *كُن* -என்றால் என்ன நடக்கும் என அல்லாஹ் கூறுகிறான்?
*ஆகிவிடு*!” என்று அல்லாஹ் கூறினால் *உடனே அது ஆகிவிடும்* (16:40)
7 ) *அல்லாஹ் தீய செயல்களுக்காக சூழ்ச்சி செய்வோரை* எவ்வாறு எல்லாம் தண்டனை வழங்குவேன் என கூறுகிறான்?
(i) *பூமியில் புதைத்துவிடுதல்*
(ii) *அவர்கள் அறியாத விதத்தில் தண்டனை*
(iii) *நடமாடிக் கொண்டிருக்கும்போதே பிடித்தல்*
(iv) *பயத்தில் இருக்கும்போதே பிடித்தல்* (16:45-47)
8 ) *ஹிஜ்ரத் செய்பர்களின் உயர்ந்த பண்புகள் என்ன? அவர்களுக்கு அல்லாஹ்வின் வெகுமதி என்ன?
பண்புகள்.:
பொறுமை கொள்பவர்கள்
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பவர்கள்
வெகுமதி:
இவ்வுலகில் அழகிய முறையில் குடியேற்றம்
மறுமையில் பெரிய கூலி (16:41-42)
____________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*