அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 150* ||
அத்தியாயம் 16*
[ஸுரா அந் நஹ்ல் -தேனீ) வசனம் 01- 20 வரை]
1 )அல்லாஹ் தான் நாடிய தன்னுடைய அடியார்களிடம்
எந்த கட்டளையுடன் வானவர்களை அனுப்புகிறான்?
*அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும் என எச்சரிப்பதற்காக* வானவர்களை அனுப்புகிறான் (16:2)
2 ) கால்நடைகளின் பயன்பாடுகளை கூறுக…
(i) *கதகதப்பான கம்பளி கிடைக்கிறது*
(ii) *உணவாக பயன்படுகிறது*
(iii) *சுமை ஏற்றிச் செல்ல உதவுகிறது*
(iv) *காலையில் மேய்ச்சலுக்கு போகும்
போதும் திரும்ப வரும்போதும் கால்நடைகளால் அழகாகக் (மதிப்பு மிக்கதாக)காணப்படுகிறது* (16:5,6,7)
3 ) *மழையினால் கிடைக்கும் பலன்கள் என்ன*?
*குடிநீராக பயன்படுகிறது*
*கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்கான (செடி கொடிகள்)தாவரங்கள் முளைக்கின்றன* (16:10)
4 ) *அல்லாஹ்* மனிதர்களை எவற்றை கண்டு சிந்தித்தால் சான்று உள்ளது என சொல்கிறான்*?
(i) *பயிர்கள், ஸைத்தூன், பேரீச்சை, திராட்சைகள் மற்றும் கனிகள்*
(ii) *இரவு, பகல், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்*
(iii) *பூமியில் மாறுபட்ட நிறங்களில் படைக்கப்பட்டவை* களை கண்டு சிந்தித்தால் அல்லாஹ்வின் அத்தாட்சி(சான்று)களை காணலாம் என அல்லாஹ் கூறுகிறான் (16:11-13)
5 )*கடலினால் கிடைக்கும் நன்மைகள் என்ன*?
(i) *புதிய பச்சை இறைச்சிகளாகிய மீன்களை உண்பதற்கு ஏற்ற உணவாக பயன்படுகிறது*
(ii) *ஆபரணங்கள் (முத்து) அலங்கார பொருட்கள் கடலில் இருந்து எடுத்து பயன்படுத்தப்படுகிறது*
(iii) *கப்பல்கள் கடலில் பயணிப்பதற்கு பயன்படுத்தபப்படுகிறது*
(4) *அல்லாஹ்வின் அருளைத் தேடுவதற்கு கடல் பயன்பபடுகிறது*
(அல் குர்ஆன் 16:14)
6 )அல்லாஹ் மலைகளை ஏன் அமைத்தான்?
*பூமி அடுக்குகள் அசையாமல் இருப்பதற்காக* (16:15)
7 ) *எதனை கணக்கிட முடியாது என அல்லாஹ் கூறுகிறான்*?
அல்லாஹ்வின் அருட்கொடைகளை கணக்கிட முடியாது* (16:18)
8 ) *மறைவானவற்றை அறியும் ஆற்றல்* யாருக்கு மட்டுமே உண்டு?
மறைவானவற்றை அறியும் ஆற்றல் *அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு*
(16:19)
___________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*