அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

|| கேள்வி 15 ||

[ஆலு இம்ரான் (அத்தியாயம் 3 வசனங்கள் 161-170 வரை)]

1) மோசடி செய்தவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வின் தூதரிடம் அபயம் தேடி வந்த போது அல்லாஹ்வின் தூதரின் பதில் என்னவாக இருந்தது?

2) அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் சொர்க்கத்தில் எவ்வாறு இருப்பதாக நபிகளார் கூறினார்கள்?

3) நம்பிக்கையை விட இறை மறுப்பிற்கு அதிகம் நெருக்கத்தில் இருந்தவர்கள் யார்?

4)நம்பிக்கை கொண்டோரையும் நயவஞ்சகர்களையும் எவ்வாறு அடையாளம் காட்டப்பட்டன?

5) உங்களை விட்டும் மரணத்தைத் தடுத்துக் கொள்ளுங்கள்! என்று யாரிடம் இவ்வாறு சவால் விடுமாறு அல்லாஹ் நபிக்கு கட்டளையிடுகிறான்?
____________________________
1. என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. (இறைச் சட்டத்தை) உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 3737)
____________________________
2. அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறை அரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும். (முஸ்லிம் 3834)
____________________________
3. நயவஞ்சகர்கள்

அன்றைய தினம் (உஹது போர் நடைபெற்ற தினம்) அவர்கள் (நயவஞ்சகர்கள்) இறைநம்பிக்கையைவிட இறைமறுப்பிற்கே மிக நெருக்கமாக இருந்தார்கள். (3:167)
____________________________
4. அல்லாஹ்வின் பாதையில் போரிட அழைத்த போது….. இந்த வசனம் (2:166,167) நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லா பின் உபை பின் சலூன் அவனுடைய தோழர்களை குறிக்கிறது.

உஹது போருக்காக புறப்பட்டுச் சென்றபோது அவர்கள் தம் தலைவரோடு சேர்ந்து பாதி வழியிலேயே திரும்பி விட்டார்கள்.

அதை அப்போது இறை நம்பிக்கையாளர்களில் சிலர் அந்த நயவஞ்சகர்களை பின் தொடர்ந்து சென்று திரும்பி வருமாறு போரில் கலந்து கொண்டு ஒத்துழைக்கும் வரும் அவர்களிடம் வலியுறுத்தினார்கள் அல்லது குறைந்தபட்சம் எதிரிகளை வரவிடாமல் தடுத்து விடுங்கள் என்று கூறப்பட்டதாக அல்லாஹ் இங்கே கூறுகிறான். இங்கே அல்லாஹ் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்களையும், போருக்கு அஞ்சி ஓடியவர்களையும் இனம் கண்டுகொள்ள வைத்தான்
____________________________
5. உஹது போரில் கலந்து கொள்ளாதவர்கள் அப்போரில் கொல்லபட்ட தம் சகோதர்கள் போருக்கு செல்லாது தம்மோடு தங்கிருந்தால் கொல்லபட்டு இருக்கமாட்டார்கள் என கூறியவர்களை நோக்கி.

போருக்குச் செல்லாமல்) தங்கிவிட்ட அவர்கள், (போரில் கொல்லப்பட்ட) தம் சகோதரர்கள் குறித்து “அவர்கள் நமக்குக் கட்டுப்பட்டிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறினர். “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டும் மரணத்தைத் தடுத்துக் கொள்ளுங்கள்!(3:168)
_________________________
Jazakallahu Haira جزاك اللهُ خيرًا

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *