அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 149* ||

அத்தியாயம் 15 [*ஸுரா அல் ஹிஜ்ர்(ஓர் ஊரின் பெயர்)* வசனம் 81 ~ 99 வரை]

1 ) *எதனின் பக்கம் பார்வையை செலுத்த வேண்டாம்* என அல்லாஹ் கூறுகிறான்?

அவர்களில் பல பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள *வாழ்வாதாரங்களின் (மற்றவர்களுக்கு கொடுத்த அருட்கொடையின்) பக்கம்

பார்வையை செலுத்த வேண்டாம்* என கூறுகிறான் (15:.88)

2 ) *இறைநம்பிக்கையாளர்களிடம்  எவ்வாறு  நடக்குமாறு* அறிவுறுத்துகிறான்?

இறைநம்பிக்கையாளர்களிடம் *பணிவு எனும் சிறகைத் தாழ்த்துமாறு* அறிவுறுத்துகிறான் (15:.88)

3 ) *திரும்பத் திரும்ப ஓதப்படுகின்ற* ஏழு வசனங்கள் எந்த அத்தியாயம்?

*அல்ஃபாத்திஹா* அத்தியாயம்

(புகாரி: 4704, திர்மிதீ: 3049, நஸாயீ: 904, அபூதாவுத்: 1245, இப்னுமாஜா: 3775, அஹ்மத்: 8328)

4 ) நபி (ஸல்) அவர்களின் *பகிரங்கமான பணி எத்தகையது?*

நபி (ஸல்) அவர்களின் பகிரங்கமான பணி, நான் பகிரங்கமாக *எச்சரிப்பவன்தான்!* என்று எச்சரிக்கை செய்வதாகும்.

(புகாரி 6482; முஸ்லிம், 4588)

5 ) நபி(ஸல்) அவர்களின் *உள்ளம் எதற்காக நெருக்கடிக்கு உள்ளாகிறது*?

நபி(ஸல்) அவர்களின் உள்ளம் *இணைவைப்போரின் கேலி செய்வது போன்ற கூற்றுகளால் நெருக்கடிக்கு உள்ளாகிறது* என்பதை அல்லாஹ் அறிவதாக கூறுகிறான். (15:97)

6 ) *மனிதனின் எந்த நிலை வரை அல்லாஹ்வை  வணங்க வேண்டும்*?

மனிதன் *மரணம் வரும் வரை (‘யகீன்’ வரும் வரை)* அல்லாஹ்வை வணங்க வேண்டும். (15:99, முஸ்லிம் ஹதீஸ் 3838)

7 ) *ஒரு நல்ல மனிதரின் இறுதி தீர்ப்பு* என்ன என்பதை *கணிக்க முடியுமா*?

ஒரு நல்ல மனிதரின் *இறுதி தீர்ப்பை கணிக்க முடியாது.*

நபி(ஸல்) அவர்களே உஸ்மான் பின் மழ்வூன்(ரலி) அவர்களைப் பற்றி *நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது* என்று கூறினார்கள். (புகாரி ஹதீஸ் 1243)

____________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *