அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 148* ||
அத்தியாயம் 15 [*ஸுரா அல் ஹிஜ்ர்(ஓர் ஊரின் பெயர்)* வசனம் 61- 80 வரை]
1) நபி லூத் (அலை) இரவின் ஒரு பகுதியில் *அவரது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு செல்லும்போது* நபி லூத் (அலை) எவ்வாறு செல்லவேண்டும் என வானவர்கள் கூறினார்கள்?
(i) *அவர்களுக்குப் பின்னால் பின்தொடர்ந்து செல்ல வேண்டும்*
(ii) *யாரும் திரும்பிப் பார்க்கக்கூடாது*
(iii) *ஆணையிடப்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டும்* (15:64-65)
2) நபி லூத் (அலை) அவர்களை *உலகத்தார் விஷயத்தில் (தலையிட வேண்டாமென) தடுத்தது யார்*?
நபி *லூத் (அலை) சமுதாய மக்கள்*
(15: 70) “உலகத்தார் விஷயத்தில் (தலையிட வேண்டாமென) *உம்மை நாங்கள் தடுக்கவில்லையா?* என்று அவர்கள் கேட்டனர்.*
3 ) *நபி லூத் (அலை) சமுதாயத்தை அல்லாஹ் எவ்வாறு அழித்தான்*?
சூரியன் உதிக்கும் நேரத்தில் *பெரும் சப்தத்துடன் தாக்கினான்* (15:73)
*அவ்வூரின் மேற்புறத்தை கீழ்புறமாக ஆக்கினான்* (15:74)
*சுடப்பட்ட கற்களை அவர்கள் மீது பொழிந்தான்* (15:74)
4) *ஹிஜ்ர்வாசிகளுக்கு (ஸமூத் சமுதாயம்)அனுப்பட்ட தூதரின் பெயர் என்ன?*
ஹிஜ்ர்வாசிகளுக்கு (ஸமூத் சமுதாயம்) அனுப்பப்பட்ட தூதர் நபி *ஸாலிஹ் (அலை) ஆவார்*
5 ) நபி(ஸல்) அவர்கள் *ஹிஜ்ர் தேசத்தை கடக்கும் போது எதற்காக பயந்தார்கள்*?
அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்கு கிடைத்த *அதே தண்டனை தமக்கும் கிடைத்துவிடுமோ* என்று பயந்தார்கள்
(புகாரி 3380, முஸ்லிம் 5700)
6 ) நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ர் தேசத்தை கடக்கும் போது அவர்களை எவ்வாறு தற்காத்து கொண்டார்கள்?
*சேண இருக்கையின் மீது அமர்ந்தபடியே தம் போர்வையால் தம்மை மறைத்துக் கொண்டார்கள்*
(புகாரி 3380, முஸ்லிம் 5700)
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*