அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 147* ||
அத்தியாயம் 15 [*ஸுரா அல் ஹிஜ்ர்(ஓர் ஊரின் பெயர்))* வசனம் 41- 60 வரை]
1 ) *இப்லீஸ்* என்கிற ஷைத்தானின் *அதிகாரம் யாரின் மீது* செலுத்துவான்?
ஷைத்தானை பின்பற்றும் *வழிகெட்டவர்கள் மீது மட்டுமே* அவனுக்கு அதிகாரம் உண்டு
(15:42)
2 ) *15:44* ல் அல்லாஹ் கூறும் *ஏழு வாசல் வழியாக நூழைபவர்கள்* யார்?
ஒவ்வொரு வாசலுக்கும் குறிப்பிட்ட குற்றவாளிகள் பிரிக்கப்பட்டுள்ளனர்
(15:44)
*பாவங்களின் தன்மைக்கேற்ப ஏழுவாசல்கள் வழியாக பிரிக்கப்பட்டு நுழைவிக்கபடுவார்கள்*
3 ) *எத்தகைய பண்பு உள்ளவர்களுக்கு சுவனச்சோலை* உண்டு?
*இறையச்சமுள்ளவர்கள்* (முத்தகீன்கள்)
(15:45)
4 ) அல்லாஹ் தன் அடியார்களுக்கு கூறச்சொல்லும் *அல்லாஹ்வின் பண்புகள் எவை எவை?*
*மிக மன்னிப்பவன்* (அல்-ஃகஃபூர்)
*நிகரற்ற அன்புடையவன்* (அர்-ரஹீம்)
*கடுமையான தண்டனை* கொடுப்பவன் (அல்-அலீம்) (15:49-50)
5 ) *நபி லூத் (அலை) சமுதாயம் செய்த குற்றம்* என்ன?
அவர்கள் *ஆண்களுடன் ஆண்கள் பாலியல் உறவு கொள்வது* ஓரினசேர்க்கை. என்கிற வெட்கக்கேடான செயல்களில் ஈடுபட்டனர். (7: 80-81)
6 ) *நபி இய்றாகிம் (அலை) அவர்களுக்கு எப்படிப்பட்ட (எந்த தன்மையிலான)நற்செய்தியை* வானவர்கள் கொண்டு வந்தனர்?
*அறிவுள்ள ஆண் குழந்தை (இஸ்ஹாக்) பிறக்கும்* என்ற நற்செய்தியை வானவர்கள் கொண்டு வந்தனர். (15: 53)
7 ) *வழிகேடர்கள் அல்லாஹ்வின் மீது என்ன மனநிலைக்கு வருவார்கள்* என நபி இப்றாஹிம் (அலை) கூறினார்கள்?
வழிகெட்டவர்கள் மட்டுமே *அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்து நிராசை அடைவார்கள்* என்று இப்ராஹீம் (அலை) கூறினார்கள். (15:.56)
8 ) *எந்த நற்செய்தியை வயோதிகம் காரணமாக* நபி இப்றாஹிம் (அலை) அவர்களின் *மனது ஏற்க மறுக்கிறது?*
தமது முதுமைப் பருவத்தில் *குழந்தை பிறக்கும் என்ற நற்செய்தியை* முதலில் நம்ப முடியாமல் வியப்புடன் கேள்வி எழுப்பினார்கள். (15:54)
_____________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*