அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 144* ||

அத்தியாயம் 14 –  *இப்ராஹீம் (இறைத்தூதர்களில் ஒருவர்*) வசனங்கள் 40-52 வரை

1) *குற்றவாளிகளுக்கு முகம் நெருப்பால் மூடி  இருக்கும் போது, உடம்பில் என்ன ஆடை போடப்படும்*?

*தாரினால்(மரப்பிசின்) செய்யபட்ட ஆடை* (14:50)

2) *நபி ஸல் அவர்களுக்கு குடும்பத்தார் சூட்டிய பெயர் என்ன*?

*முஹம்மது* ( அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), நூல்: முஸ்லிம் (525)

(முஸ்லிம் 525 வது ஹதிஸ்ல் இன்னும் சில கூடுதல் தகவல்கள் உள்ளன நேரம் கிடைக்கும் போது தெரிந்து கொள்ளவும்)

3) இப்ராஹீம்  நபி அல்லாஹ்விடம் தனது சந்ததிகளுக்காக கேட்டது என்ன? பெற்றோர்களுக்காக கேட்டது என்ன?

சந்ததிகளுக்கு கேட்டது:

*தொழுகையை நிலைநிறுத்த*

*என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலைநிறுத்தக் கூடியவர்களாக ஆக்கி வைப்பாயாக!*

(رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى) 14:40

பெற்றோர்களுக்காக கேட்டது:

*பாவமன்னிப்பு*

*எங்கள் இறைவனே! விசாரணை நடக்கும் நாளில் என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக*! ( 14:41)

(رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ)

____________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *