அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 143* ||
அத்தியாயம் 14 – *இப்ராஹீம் (இறைத்தூதர்களில் ஒருவர்*) வசனங்கள் 31-40 வரை
1) *அல்ஹம்துல்லில்லாஹ்* என இப்ராஹீம் நபி எப்போது கூறினார்கள்?
*வயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்*. எனது இறைவன் பிரார்த்தனையைச் செவியேற்பவன். (14:39)
2) *எதை மனிதர்களால் கணக்கீடு செய்ய முடியாது* என அல்லாஹ் கூறுகிறான்?
*அல்லாஹ்வின் அருட்கொடையை* (14:34)
3) *ஜிப்ரீல் மூலம் நபி ஸல் அவர்களுக்கு கிடைத்த செய்தி* என்ன ?
ஜிப்ரீலே! முஹம்மதிடம் சென்று, *நாம் உம் சமுதாயத்தார் தொடர்பாக உம்மைத் திருப்தியடையச் செய்வோம்; உம்மைக் கவலையடையச் செய்ய மாட்டோம்” என்று கூறுக என்றான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் (346), இப்னு ஹிப்பான் (7234), நஸாயீ (11205)
___________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*